சிரஞ்சீவி - Siragnsiivi
சிரசீவி, s. (சிரம்+சீவி) a longlived person, தீர்க்காயுசுடை யோன்; 2. a congratulatory title prefixed to the name of youngsters (as in சிரஞ்சீவி தம்பி சுந்தரம்); 3. a crow, காகம்; 4. the silk-cotton tree, இலவமரம்; 5. sage Markkandeya.
சிரஞ்சீவியாயிருப்பாய், may you be blessed with long life. சிரஞ்சீவிப் பட்டம், longevity (as a boon obtained from deity). சிரஞ்சீவியர், the long-lived, the seven ancients who are supposed to be still living (அசுவத்தாமா, பலி, வியா சர், அநுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர்).
சதம் - Satham
s. a hundred, நூறு; 2. contr. of சதகம்), certainty, durability, perpetuity, நிலைமை; 3. a leaf, இலை; 4. feather, இறகு; 5. end, termination, இறுதி.
இவ்விடம் சதமோ அவ்விடம் சதமோ, Is this or the other world eternal? லோக வாழ்வு சதமல்ல, worldly prosperity is not durable or everlasting. சதகோடி, a hundred crores, சததாரை. சதகோடி சங்கம், a very large assembly, சதாகோடி சங்கம். சதஞ்சீவி, சிரஞ்சீவி, a long-lived person. சதநியுதம், a hundred lakhs a crore. சதபத்திரி, centifolium; 2. the lotus, சதபத்திரம், சததளம். சதமகன், சதக்கிருதன், Indra-the performer of 1 sacrifices. சதமாயிருக்க, to be perpetual, eternal.
சஞ்சீவி -
சஞ்சீவனி,
சஞ்சீவினி,
s. a medicine for long life a restorative; 2. gulancha,
சீந்தில்.
சஞ்சீவகரணி, a medicine which restores one to strength and consciousness; 2. the tamarind tree. சஞ்சீவனம், restoring to life; reviving, reanimating. சஞ்சீவி மூலிகை, a root which restores from swooning. சஞ்சீவி பருவதம், a mountain referred to in Ramayana, as having in it herbs which restore the dead to life. சஞ்சீவியாயிருக்க, to live long. அமிர்த சஞ்சீவி, a medicine which restores the dead to life, an elixir of life.
From Digital DictionariesMore