எப்படி - Eppadi
adv. (எ) how? எவ்விதம்.
எப்படிக் கூடுமோ அப்படிப்பார், do as you can. எப்படிக்கொத்த காரியம், எப்படிப்பட்ட காரியம், what a thing is that, what kind of dealing is that? அப்படிக்கொத்தவன், what kind of man is he? எப்படியும், எப்படியாகிலும், however, at all events, by all means.
ஓ - Oo
interj. (implying admiration or pity), behold, alas! as in ஓ ஓ பெரியன், behold what an illustrious person he is! ஓ, ஓ, காரியங்கெட்டுப்போயிற்று, alas! the matter is utterly ruined, 2. interrog. affix. (implying doubt or negation) as in அவனோ வந்தான், is it he (doubtful) that came? படிக்கவோ வந்தாய், did you come to learn? (no, but to play), நானோ சொன்னேன், did I say so? நீ செய்தாயோ, did you do it? (no); (N. B. In addressing God or oneself the interrog. sign, ஓ is considered elephant); 3. conjunctive affix. (implying doubt) whether, as in அவன் வருவானோ தெரியாது, I do not know if he will come; 4. connective affix. (with following emphatical, ஏ, தான் or எல்லாம்,) குரு எப்படியோ அப்படியே சீஷனும், the disciple will be just like his master, அவர் என் னென்ன சொல்லுகிறாரோ, அதை எல் லாம் செய், do whatever he says; 5. adversat. affix. (also ஓவென்றால்) but, as in நான் அழைத்தேன் அவனோ (வென்றால்) வரவில்லை, I called him but he did not come; 6. conditional affix. (implying warning), நீ அதைச் செய்தா யோ செத்தாய், if you do that, you are dead; 7. affixed to an interrogative, it expresses ignorance or great doubt, as in அவன் ஆரோ, I know not who he is.
எவ்வாறு - Evvaaru
adv. (எ) in what manner? how? எப்படி.
From Digital DictionariesMore