பெறு - Peru
IV.
v. t. get, obtain, gain,
அடை; 2. beget, generate,
ஜனிப்பி; 3. bring forth, bear,
பிரசவி; 4. experience
அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of. பே பே s. foam, froth, நுரை; 2. cloud, மேகம்.
ஆண்பிள்ளையைப் பெற்றாள், she has brought forth a son. அவள் பெற்ற பிள்ளை, her own child. என்ன (எத்தனை) பெறும், how much is it worth? ஒருகாசு பெறாத வேலை, a work not worth a cash. இவன் (ஒரு) காசு பெறாத மனுஷன், he is a worthless fellow. பெறாத, neg. adj. part. insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security). பெறுமதி, (prov. பெறுதி) worth, value, reward. பெறுமானம், worth.
உரு - Uru
s. (cf. உருவு, உருபு, உரூபம், உருவம்) form, shape, appearance, வடிவு; 2. (coll.) ship, கப்பல்; 3. an article, piece, உருப்படி; 4. repetition of a prayer, an incantation or a lesson; 5. (coll.) gold bead strung on either side of the marriage badge; 6. idol விக்கி ரகம்; 7. embryo, கரு.
எத்தனை உரு, how many articles or ships are there? உரு எடுக்க, to assume a form, to incarnate. உருநாட்டு, an idol. உருப்பட, to be formed shaped, to prosper. உருப்படி, pieces, articles, each individual, each particular. ஆயிரம் உருப்படி, one thousand pieces. உருப்படியாய், adv. soundly unhurt, without any injury - ஆள் உருப்படி யாய் வந்து சேர்ந்தான். உருப்போட, to repeat a mantram or a lesson by heart. உருமாற, to be transformed. உருவழிந்துபோக, -க்குலைய, to be emaciated, to be disfigured, to be out of order. உருவாக, -த்தரிக்க, to be shaped, formed, conceived, generated. உருவாக்க, -ப்படுத்த, to form or shape. உருவிலி, Manmatha who has no shape; 2. a visionary object. உருவேற்படுத்த, to form, to fashion. உருவொளி, reflection.
பிள்ளை - Pillai
s. a child male or female,
குழந்தை; 2. a son,
மகன்; 3. a title appended to the names of Vellala caste men; 4. a word joined to the name of certain animals, birds & trees (as in
கீரிப்பிள்ளை,
கிளிப்பிள்ளை,
தென்னம்பிள்ளை); the young of animals living on the branches of trees; the young of birds in general; 5. a small black bird,
கரிக்குருவி; 6. the god Bhairava.
ஏன் பிள்ளாய், well child! அவனுக்குப் பிள்ளை எத்தனை, பெண் எத்தனை, how many sons & daughters has he? பெண்ணும் பிள்ளையும், bride and bride-groom. பிள்ளையுண்டாயிருக்க, to be pregnant. பிள்ளைகரைக்க, to procure abortion. பிள்ளை கொல்லி, infanticide; 2. a disease fatal to infants; 3. a kind of assafoetida. பிள்ளைக்கவி, a species of poetic composition. பிள்ளைக்கோட்டை, a small fort. பிள்ளைத்தமிழ், a poem celebrating the various stages in the infancy and childhood of a hero. பிள்ளைத்தாய்ச்சி, a pregnant woman. பிள்ளைத்தேங்காய், the best kind of cocoanut reserved for planting. பிள்ளைத்தேள், a centiped, scolopendra. பிள்ளைப்பூச்சி, the gryllus, an insect. பிள்ளை பெற, to be delivered of a child. பிள்ளை பெறாத மலடி, a barren woman. பிள்ளைப்பேறு, child birth. பிள்ளைமா பிரபு, (prov.) a nobleman, an eminent person. பிள்ளைமை, childishness, puerility. பிள்ளையாண்டான், a lad, a boy. பிள்ளையார், the god Ganesa. பிள்ளையார் சுழி, a curve to represent பிள்ளையார். பிள்ளைவங்கு, (prov.) a cavity to receive the mast of a dhoney. பிள்ளைவிழ, to miscarry. ஆண்பிள்ளை, a male child; 2. a man. ஊத்தாம்பிள்ளை, a bladder. பெண்பிள்ளை, a female child; 2. a woman.
From Digital DictionariesMore