எதிர் - Ethir
(எதிரானது) s. that which is opposite or in front, முன்னிருப்பது; 2. similitude, comparison, ஒப்பு; 3. futurity, வருங்காலம்; 4. rivalry, எதிரி டை; 5. target, aim, இலக்கு; 6. adv. in front முன்.
எதிரறை, an opposite room. எதிராக, எதிர் முகமாக, opposite, face to face. எதிராளி, adversary, opponent. எதிரி, the defendant in a law suit; 2. same as எதிராளி. எதிரிடை, எதிர் முகம், opposition, what is against, what is equivalent. எதிரிடையாய்ப் பேச, to dispute, contradict. அதுக் கெதிரிடையாக, அதுக்கெதிரிட மாக, அதுக்கெதிராக, to the contrary. எதிருத்தரம், எதிர்மொழி, எதிருரை, an answer, a reply, a rejoinder, a retort. எதிரே, எதிரிலே, before, in front. எதிரொலி, an echo. எதிர் குதிர், obverse, மறுதலை. எதிர்கொண்டு போக, -கொண்டழைக்க, to go to meet and receive one. எதிர்க் கட்சி, the opposite party. எதிர் செலவு, courteous advance to welcome one. எதிர்ச்சீட்டு, -முறி, a note of hand given for another that is lost, a counterbond. எதிர் நிற்க, to stand before one. எதிர் பாப்பு, Anti-Pope (christ.) எதிர் பார்க்க, (with dat.) to wait for an expected person, to hope for a thing, to be in expectation of a thing. எதிர்ப்பட, to meet by chance. எதிர் மறுப்பவர், Protestants (christ.) எதிர் மறை, (in gram.) negative form of expression. எதிர் மறை வினை, a negative verb. எதிர் வர, to meet, to oppose. எதிர் வாதி, a defendant in law. எதிர் வீடு, opposite house.
விவரம் - Vivaram
விபரம், s. details, detailed narration, amplification, particulars or contents of a speech or letter, விவரிப்பு; 2. the hollow of a tube, a hole, உட்டுளை; 3. separation, disjunction, பிரிவு; 4. difference between the time of new & fullmoon, the nalikei passed from sun rise and the length of that day.
விவரகதி, -கெதி, difference of the daily motion of the sun and the moon. விவரமாய், at large, with all the circumstances, in detail. விவரத்தோடே கேள், hear the whole of what passed.
வைதருப்பம் - vaitaruppam
s. a mode of rhetoric opposed to hyperbole, கௌடத்திற் கெதிர்.
From Digital Dictionaries