உடந்தை - Udanthai
s. fellowship, கூட்டுறவு; 2. connection, participation, சேர் மானம்; 3. union, support, relationship.
அவளுக்கும் எனக்கும் உடைந்தையில்லை; I have no connection with her. உடந்தைக்காரன், a consort, companion, partner. உடந்தைக் குற்றவாளி, an abetter of an offence, accomplice. உடைந்தைப்பட, to consent, to have a hand in. உடந்தையாய், together, in company with.
பெறு - Peru
IV.
v. t. get, obtain, gain,
அடை; 2. beget, generate,
ஜனிப்பி; 3. bring forth, bear,
பிரசவி; 4. experience
அனுபவி; v. i. be worth, விலைபெறு, Following an infinitive பெறு is almost synonymous to படு as in அடையப் பெறும், it may be had, நன்கு மதிக்கப் பெற்றவன், one who is highly esteemed, காணப்பெற்றேன், I obtained sight of. பே பே s. foam, froth, நுரை; 2. cloud, மேகம்.
ஆண்பிள்ளையைப் பெற்றாள், she has brought forth a son. அவள் பெற்ற பிள்ளை, her own child. என்ன (எத்தனை) பெறும், how much is it worth? ஒருகாசு பெறாத வேலை, a work not worth a cash. இவன் (ஒரு) காசு பெறாத மனுஷன், he is a worthless fellow. பெறாத, neg. adj. part. insufficient, ineffectual (as in பெறாத, ஈடு, insufficient security). பெறுமதி, (prov. பெறுதி) worth, value, reward. பெறுமானம், worth.
கூட்டு - kuuttu
s. (கூடு) combination, union, சேர் மானம்; 2. fellowship, society, சம்பந் தம்; 3. partnership, பங்கு; 4. a composition, mixture; seasoning or that which is added to a curry to relish it; 5. tribute, திறை; 6. plenty, abundance; 7. assistance, help.
கறியிலே கூட்டுப்போடாதே, do not season the curry. கூட்டாளி, a companion, an associate, apartner in trade. கூட்டுக்கறி, a curry made of vegetables and dholl or meat. கூட்டுத்தொழில், a trade in partnership. கூட்டுப்பயிர், joint cultivation. கூட்டுமா, flour used in curry. கூட்டுமாறு, a broom, விளக்குமாறு. கூட்டுமூட்டு, cofederacy, league, conspiracy; 2. slander, calumny, பழி யுரை. கூட்டுவர்க்கம், mixture of several ingredients or of odoriferous ointments; a fabrication, a false distorted version. கூட்டுறவு, friendship, alliance, cooperation, social relation; 2. matrimonial love; 3. concubinage. கூட்டெழுத்து, compound consonants, conjoined letters in hand-writing. சந்தனக்கூட்டு, sandal paste mixed with perfumes.
From Digital DictionariesMore