பருவம் - Paruvam
s. time, period,
காலம்; 2. seasons of the year,
இருது; 3. full moon,
பௌரணமி; 4. new-moon,
அமாவாசை; 5. suitable time, opportunity,
சமயம்; 6. youthfulness, tenderness,
இளமை; 7. age period or stage of life,
வயது; 8.puberty,
பக்குவம்; 9. section, canto,
பிரிவு; 1. state of things, aspect of affairs 11. degree, proportion.
ஆறுபருவம், the six seasons of the year which are 1. கார், August & September, 2. கூதிர், October & November; 3. முன்பனி, December & January; 4. பின்பனி, February & March; 5. இளவேனில், April & May; 6. முதிர்வேனில், June & July. பருவத்திலே செய்ய, to do a thing in seasonable time. பருவத்தே பயிர்செய், (lit. cultivate in the proper season); "strike the iron while it is hot" "make hay while the sun shines". பருவத்திலே பிள்ளைபெற, to bring forth a child at the proper time. பருவ மழை, seasonable rain. பருவமான பெண், a young woman grown marriageable. ஆடவர் பருவம், the six stages of life in males:- பாலன் (under five years), காளை (5 to 16 years), குமாரன் or விடலை (16 to 32 years), ஆடவன் or மன்னன் (32 to 48 years), மூத்தோன் or ஆடவவிருத்தன் (48 to 64 years) & விருத்தன் (above 64 years). மகளிர் பருவம்:- I. four stages:- வாலை up to the age of maturity, தருணி, a young woman, பிரவிடை, பிரௌடை, a middle-aged woman & விருத்தை, an old woman. II. seven stages:- பேதை (5 to 7 years), பெதும்பை (8 to 11 years), மங்கை (12 to 13 years); மடந்தை (14 to 19 years), அரிவை (2 to 25 years), தெரிவை (26 to 31 years) & பேரிளம்பெண் (32 to 4 years). பருவம் பார்க்க, to think how to act; 2. to seek opportunity.
பிராயம் - pirayam
s. age, state of life, youth,
பருவம்; 2. age of discretion,
விவேகப் பருவம்; 3. sin, evil,
பாவம்.
உனக்கெத்தனை பிராயம், how old are you? எனக்கிருபது பிராயமுண்டு, I am twenty years old. பிராயந்தப்பிப் போயிற்று, the proper age is past. பிராயப்பட, பிராயமறிய, பிராயமாக, to attain the age of puberty. முதிர்ந்த பிராயம், old or mature age. வாலப்பிராயம், the prime of life. விளையாட்டுப் பிராயம், சிறு-, childhood.
முதிர் - mutir
VI. v. t. mature, முதிரச்செய்.
முதிர்ப்பு, v. n. maturity, முதிர்ச்சி.
From Digital DictionariesMore