ஏற்று - Ettru
III. v. t. raise, lift up, hoist up, put up, எழுப்பு; 2. load, பாரமேற்று; 3. instruct, teach, கற்பி; 4. praise, eulogize, புகழு; 5. light, as a lamp, விளக்கேற்று; 6. think, consider, நினை; 7. run over, as wheel over a person.
குற்றத்தை என்மேல் ஏற்றப்பார்த்தான், he endeavoured to put the fault on me. இதை அதின் பேரில் ஏற்றிச் சொல்ல லாம், this is applicable to that. ஏற்றுமதி, exportation, export, cargo. ஏற்றுமதிச் செலவு, shipping charges. ஏற்றுமதி பண்ண, --செய்ய, to export. கணக்கை ஏற்ற, to sum up. குடியேற்ற, to populate, to colonize. தொடர்ந்தேற்றியாய், continuously, without interruption. விளக்கேற்ற, to light a candle, to set up a candle.
இரு - Iru
adj. (from இரண்டு used before a consonant) two, double, both, இரட் டிப்பான; 2. great, spacious, vast, இருநிலம், spacious earth; 3. black, கரிய.
இருகாலும், both the feet; 2. twice. இருதலைக்கொள்ளி, a brand burning on both ends. இருதலைக்கொள்ளி யெறும்புபோலாக, to be like an ant betwixt two fires. இருதாரைக் கத்தி, a two-edged sword or knife. இருதிணை, (gram), the two classes of nouns. இருதிறத்தார், both parties. இருநிறம், two colours, a double colour. இருநினைவாயிருக்க, to be double-minded, fluctuate, waver. இருநூறு, two hundred. இருபது, twenty. இருபிறப்பாளர், the twice-bora - the Brahmins, Kshatriyas and Vaisyas. இருமடங்கு, two-fold. இருமரபு, the two ancestral lines (paternal and maternal). இருமனம், hesitancy, irresolution, double-dealing. இருமை, duality, the two births, the present and future life. இருவர், two persons. அவர்கள் இருவரும், both of them.
அழு - Azhu
I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.
ஒருவனை நினைத்து அழ, to bemoan one. அழுகள்ளி, a hypocritical weeper. அழுகுணி, a crying person. அழுகுரல், sound of weeping. அழுகை, அழுதல், v. n. weeping.
From Digital DictionariesMore