ஒழுங்கு - Ozhungu
s. row, line, order, regularity, வரிசை; 2. rule, discipline, முறை; 3. good conduct, decency, modesty, ஒழுக்கம்; 4. standard rate for assessment on land, நிலத்தீர்வைக் கணக்கு.
ஒழுங்காக வை, put in order. ஒழுங்கான நடை, orderly behaviour. ஒழுங்கில்லாமல் கிடக்க, ஒழுங்கீனமாய்க் கிடக்க, to be in disorder or confusion. ஒழுங்கீனம், ஒழுங்கின்மை, disorder, confusion. ஒழுங்குப்படுத்த, to set in order, arrange, organize. ஒழுங்கோடிருக்க, to be in good order.
கோ - ko
VI. v. t. (com. கோர்), string pearls, beads etc, கோவைசெய்; 2. thread a needle; 3. clasp, join, தொடு; 4. compose, arrange, ஒழுங்காக்கு; 5. fabricate (as stories) கதைகட்டு; 6. put on, wear; தரி; 7. oppose, resist, தடு, எதிர். கோப்பு, v. n. stringing, arranging, manner, method.
கோவை, கோர்வை, v. n. a string of beads, flowers etc. 2. a kind of poem; 3. series, row; 4. a climbing plant. கோர்வையாணி, pegs for joining rafters together. ஓ?வைக்கோவை, a poem of Avvyar. கற்கோவை, மணற்--, different kinds of கோவை creeper. கைகோக்க, see under கை. கைக்கோர்வை, joint-hands, a cord of gold thread. முத்துக்கோர்வை, a necklace of pearls.