அழி - Azhi
II. v. i. perish, fall to dust, decay, கெடு; 2. fail, தவறு; 3. be defeated, தோல்; 4. swell, increase, பெருகு; 5. sympathise with, பரிவுகூர்; 6. be exhausted, spent, செலவு ஆகு.
அழிகரு, அழிகுட்டி, an abortion. அழிம்பன், a spendthrift, a prodigal, a profligate. அழிம்பாய்ப் போக, அழிம்பாக, to be wasted. அழிம்பு, waste, damage, ruin, injury, act of injustice. சொத்து அழிய, wealth to be wasted. சீர் அழிய, to go out of order, செய லழிய, to become disabled தீரமழிய to lose courage; to be discouraged (உள்ளழிய). அழியாதது, incorruptible thing. அழியாமை, neg. v. n. incorruption. அழிவழக்கு, a very unjust law suit. அழிவு, (v. n.) ruin, decay, downfall. கற்பு அழியாத பெண், a virgin.
கூடு - Koodu
s. a nest, hive, cage; 2. a hen-roost coop; 3. a small receptacle; 4. the body as receptacle of the soul; 5. a case, a sheath, கூறை; 6. a covering of a cart, கூடாரம்; 7. dome, cupola, ஸ்தூபி; 8. a basket for catching fish, மீன்பறி; 9. witness box.
கூட்டோடே போச்சுது குளிரும் காய்ச் சலும், shivering and fever left with the body; the person died. கூடாயிருக்க, to be hollow. கூடுகட்ட, to build nests or cases. கூடுகலைக்க, to destroy a nest. கூடுபோட, -விட, to die. கூடுவிட்டுக் கூடுபாய்தல், the passing of the soul from one body to another at pleasure. கூட்டாஞ்சோறு, a common meal, a picnic, rice boild with vegetables etc. கோழிக்கூடு, a hen-coop; 2. Calicut. தேன்கூடு, a honey-comb. பூச்சிக்கூடு, a cobweb; 2. an ear-ornament. மைக்கூடு, an ink-stand. கூட்டில் ஏற, to ascend the witness box. கூட்டு வண்டி, a cart with a top (x மொட்டை வண்டி).
இரத்தம் - Ratham
ரத்தம்,
s. blood,
உதிரம்; 2. red, crimon,
சிவப்பு; 3. coral,
பவளம்; 4. lungs, lever, spleen and other viscera,
ஈரல்; 5. saffron,
குங்குமம்; 6. stick lac,
கொம்பரக்கு.
இரத்தக்கலப்பு, --உறவு, relation by blood, consanguinity. இரத்தக்கவிச்சு, --க்கவில், offensive smell of blood. இரத்தக்கழிச்சல், --கிராணி, dysentery. இரத்தக்குழந்தை, a new-born child. இரத்தக் கொழுப்பு, --புஷ்டி. lustiness, stoutness, plethora, pride. இரத்தங்கக்க, இரத்தமாய் வாயிலெடுக்க, to vomit blood. இரத்தங்குத்தி வாங்க, to blood. இரத்த சம்பந்தம், consanguinity. இரத்த சாட்சி, martyrdom, martyr (chr. us.) இரத்தச் சுருட்டை, blood carpersnake, the bite of which causes blood vomiting. இரத்தம் சுண்டிப்போயிற்று, the blood is dried up by hunger, fasting etc. இரத்த நரம்பு, --தாது, vein, blood vessel. இரத்த பாத்தியம், consanguinity, kin. இரத்தபாசம், affection due to blood relationship. இரத்தப்பழி, revenge for bloodshed. இரத்தப்பிரமியம், bloody urine. இரத்தப்பிரவாகம், a flood of blood. இரத்தப்பிரியன், a blood thirsty man. இரத்த மூலம், hemorrhoids. இரத்தம் பீறிடுகிறது, blood gushes out. இரத்தம் வடிகிறது, பாய்கிறது, blood runs down. இரத்தாசயம், the heart. இரத்தாம்பரம், red or purple cloth. இரத்தோற்பலம், the red water-lily.
From Digital DictionariesMore