தவிடு - Thavidu
s. (oblique தவிட்டின்), bran.
தவிட்டுக்களி, a thick pap of bran. தவிட்டுக்கிளி, a small locust. தவிட்டுகொழுக்கட்டை, cakes made of bran. தவிட்டுநிறம், brown, dim colour. தவிட்டுப்புறா, a turtle dove. தவிட்டுப்பேன், a small louse. தவிட்டுமயிர், brown hair; first down of birds. அரிசித்தவிடு, rice-bran. உமித்தவிடு, inferior bran containing husk.
நில் - Nil
நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.
நின்றதுநிற்கப் புறப்பட்டார், he set out abruptly. தெய்வம் நின்றுகொல்லும், God is slow in punishing men. அதுநிற்க, let it alone, leaving that aside, (an expression used in reverting to another point). நில்லா, நில்லாத, not durable. நில்லாமல், (நிற்காமல்) போக, to go without delay; to come to an end. நில்லாமை; inconstancy, mutableness. நிற்றல், v. n. a standing, நிலை; standing. நின்று, adv. part. standing; 2. after the local ablative இல் it expresses from, இருந்து, (as in ஆற்றில் நின்றேற, to come up from or out of the river). நின்றுநின்று நடக்க, to make frequent stops in walking. நின்றுபோக, to cease, to stop, (as pain, salary etc.).
விழுக்காடு -
s. the usual rate or price of a thing, at the rate of; 2. average price, சகடு; 3. share, proportion, வீதம்.
பணத்துக்கெத்தனை விழுக்காடு, how many for a fanam? அது எந்த விழுக்காட்டிலே (விழுக் காடாய்) விற்கிறது, at what rate does that sell? வீட்டுக்கொத்த விழுக்காடு குடிக்கூலி கொடுப்பேன், I shall pay a rent proportionate to the house. அவனுக்குக் கொடுத்த விழுக்காடு எனக்குச் சம்பளம் கொடும், give me as much wages as you gave him. நூற்றுக்குப் பத்து விழுக்காடு, at ten percent.
From Digital DictionariesMore