கூர்மை - Kuurmai
s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு.
கூரிய, கூர் adj. sharp. கூரியது, that which is sharp. கூரியவாள், a sharp sword. கூரியன், a judicious and skilful man. கூர்ங்கண், sharp, piercing eyes. கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument). கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing. கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently. கூர்ம்பல், a sharp tooth. புத்திக்கூர்மை, intellectual acuteness.
அற்பம் - Arpam
s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய்.
அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
ஆலோசனை - Aaloosanai
s. deliberation, consultation, யோசனை; 2. counsel, advice, புத்தி.
ஆலோசனை கேட்க, to ask advice, to take advice. ஆலோசனை சங்கம், the privy council of a king; council. ஆலோசனை பண்ண, to consult. தீர்க்காலோசனை, deep deliberation. புனராலோசனை, reconsideration.
From Digital DictionariesMore