பிள்ளை - Pillai
s. a child male or female,
குழந்தை; 2. a son,
மகன்; 3. a title appended to the names of Vellala caste men; 4. a word joined to the name of certain animals, birds & trees (as in
கீரிப்பிள்ளை,
கிளிப்பிள்ளை,
தென்னம்பிள்ளை); the young of animals living on the branches of trees; the young of birds in general; 5. a small black bird,
கரிக்குருவி; 6. the god Bhairava.
ஏன் பிள்ளாய், well child! அவனுக்குப் பிள்ளை எத்தனை, பெண் எத்தனை, how many sons & daughters has he? பெண்ணும் பிள்ளையும், bride and bride-groom. பிள்ளையுண்டாயிருக்க, to be pregnant. பிள்ளைகரைக்க, to procure abortion. பிள்ளை கொல்லி, infanticide; 2. a disease fatal to infants; 3. a kind of assafoetida. பிள்ளைக்கவி, a species of poetic composition. பிள்ளைக்கோட்டை, a small fort. பிள்ளைத்தமிழ், a poem celebrating the various stages in the infancy and childhood of a hero. பிள்ளைத்தாய்ச்சி, a pregnant woman. பிள்ளைத்தேங்காய், the best kind of cocoanut reserved for planting. பிள்ளைத்தேள், a centiped, scolopendra. பிள்ளைப்பூச்சி, the gryllus, an insect. பிள்ளை பெற, to be delivered of a child. பிள்ளை பெறாத மலடி, a barren woman. பிள்ளைப்பேறு, child birth. பிள்ளைமா பிரபு, (prov.) a nobleman, an eminent person. பிள்ளைமை, childishness, puerility. பிள்ளையாண்டான், a lad, a boy. பிள்ளையார், the god Ganesa. பிள்ளையார் சுழி, a curve to represent பிள்ளையார். பிள்ளைவங்கு, (prov.) a cavity to receive the mast of a dhoney. பிள்ளைவிழ, to miscarry. ஆண்பிள்ளை, a male child; 2. a man. ஊத்தாம்பிள்ளை, a bladder. பெண்பிள்ளை, a female child; 2. a woman.
நாடகம் - Naadagam
s. a play, drama, கூத்து; 2. dancing in a play or drama, கூத்து; 3. dramatic science.
நாடகக்கணிகை, --ப்பெண், a dancing girl, an actress. நாடகசாலை, a theatre; 2. a dancing girl. நாடகத்தமிழ், dramatic Tamil. நாடகத்தி, an immodest women, அவிசாரி. நாடகமடிக்க, --நடிக்க, to be very haughty or immodest, said of a woman in displeasure. நாடகமாட, நாடகம் விளையாட, to act or perform a play. நாடகர், நாடகியர், actors. நாடகாங்கம், a gesture, pantomime.
கொடுமை - Kodumai
s. crookedness, வளைவு; 2. severity, harshness, கொடூரம்; 3. violence, cruelty, tyranny, oppression, கொடுங்கோன்மை; 4. sin, பாவம்; 5. injustice, bias. (See அருமை Note.)
வயிற்றின் கொடுமையினால் வருந்து கிறான், he is vexed by want of food. கொடிய காடு, a wild desert. கொடிய கோபம், severe wrath. கொடியது, கொடிது, that which is cruel or horrid. கொடியமனசு, a cruel mind. கொடியன், கொடியோன், கொடியவன் a cruel wretch. கொடுங்கண், an evil eye. கொடுங்கோலன், an unjust king, a tyrant. கொடுசூரி, -சூலி, a cruel wicked woman. கொடுஞ்சொல், sharp or harsh language. கொடுஞ் சொறி, scab or itch in animals. கொடுந் தமிழ், the vulgar colloquial dialect of Tamil as opposed to செந்தமிழ், the highest dialect. கொடுந்துயர், lit. extreme pain; death. கொடுமரம், a bow, வில்; 2. sagittarius, தனுராசி; 3. the rung of a ladder. கொடுமை செய்ய, -இழைக்க, -ப்படுத்த, to do violence, to oppress, to tyrannize. கொடும்பசி, severe hunger. கொடும்பாவி, a great sinner; 2. the huge person personating vice in the form of a woman dragged through the streets in time of drought to bring rain, கொடும் பாவை. கொடும்புலி, the lion, சிங்கம். கொடுவரி, the tiger. கொடுவாய், a kind of wild animal, the hyena; 2. a kind of fish. கொடுவாளை, கொடுவா, as கொடுவாய்; 2. கொடுவாள், a garden sickle or hook. கொடுவினை, evil deeds of former births. கொடுவை, wickedness, mischievousness, துஷ்டத்தனம்.
From Digital DictionariesMore