வயிறு - Vayiru
s. the belly, abdomen, stomach, உதரம்.
எனக்கு வயிற்றை எரிகிறது, I feel a burning sensation in my stomach; 2. I feel excessive grief, I am envious, sorrowful or hungry. வயிறு கழிய, வயிற்றாலேபோக, to have looseness or diarrhoea, to purge. வயிறு காய, to hunger, to be hungry. வயிறு குளிர, to be satisfied, refreshed by food. வயிறுதாரி, வயிற்றுமாரி, a glutton, a devourer. வயிறுபொரும, வயிறூத, the stomach to get puffed up by indigestion, the belly to swell from eating. வயிறு வளர்க்க, to maintain oneself. வயிறெரிய, to feel heat in the stomach; to be hungry; to be envious; to yearn in compassion. வயிற்றுக் கனப்பு, constipation. வயிற்றுக் காய்ச்சல், hunger. வயிற்றுப் பிழைப்பு, livelihood. வயிற்றுப் போக்கு, looseness of the bowels. வயிற்றுவலி, -நோய், stomach-ache. வயிற்றெரிச்சல், வயிற்றெரிவு, v. n. of வயிறெரிய. அடிவயிறு, the lower part of the abdomen. மேல்வயிறு, the upper part or region of the stomach.
கிரீடம் - Kreedam
s. crown diadem, crest, முடி.
கிரீடந்தரிக்க, to wear a crown. கிரீடாதிபதி, கிரீடதாரி, கிரீடந்தாங்கி, a crowned leader, a king. இலைக்கிரீடம், a laurel, a chaplet of green leaves. கிரீடபங்கம், dethronement.
சூத்திரம் - Soothiram
s. thread, twisted thread, cord,
நூல்; 2. machine, engine, artificial piece of work (as a clock etc.)
இயந்திரம்; 3. stratagem, artifice, contrivance,
உபாயம்; 4. a brief rule or precept in grammar, logic; 5. a secret, a mystery,
இரகசியம்; 6. a proposition, a doctrine, a predicated dogma,
கொள்கைச் சூத்திரம்.
சூத்திரக்காரன், சூத்திரன், சூத்திரி, an artist, a mechanist, an engineer. சூத்திரத்தாரன், a stage-manager; 2. God. சூத்திரதாரி, one who moves and manages the wires in a puppetshow; 2. God (as moving all things). சூத்திரப் பதுமை, a puppet moved by strings, சூத்திரப் பாவை. சூத்திரப் பதுமையாட்ட, to make puppets dance. சூத்திரப் புறநடை, a note appended to a rule. சூத்திர வேலை, an ingenious contrivance, anything of mechanism. கபட சூத்திரம், a cunning deception. சல சூத்திரம், waterworks, hydraulic machine.
From Digital DictionariesMore