தோற்றம் - Thoorram
s. (தோன்று) appearance, spectacle, காட்சி; 2. rise, beginning, origin, துவக்கம்; 3. birth, பிறப்பு; 4. things created, visible objects; 5. idea, எண்ணம்; 6. phenomena, நூதனக் காட்சி; 7. offspring, a son, மகன்; 8. semblance, சாயை; 9. vision, prospect, sight, தரிசனம்; 1. debut, entrance on the stage as a character வருகை; 11. a phantom, an illusion, ஆவேசம்; 12. a fit, seasonable word, ஏற்றமொழி; 13. a word, சொல்; 14. vigour, strength, வலி; 15. praise, eulogy, புகழ்.
தோற்றமாக, to appear, தோற்றப்பட; 2. to appear on the stage. தோற்றமானவன், தோற்றப்பட்டவன், a celebrated, conspicuous man. நிலாத்தோற்றம், rising of the moon. தோற்றக்கவி, a verse sung just before the arrival of an actor on the stage. தோற்றத்தரு, the verse and tune sung at the appearance of a person on the stage, who dances round the area while it is sung.
தீர்க்கம் - Thiirkkam
s. length, extension, நீளம்; 2. distinctness, தெளிவு; 3. perfection, accuracy, பூரணம்; 4. positiveness, certainty, திட்டம்; 5. distance, remoteness, தூரம்.
தீர்க்க சதுரம், a parallelogram. தீர்க்கசந்தி, (Gr.) a kind of combination of Sanskrit words by which 2 similar vowels long or short coalesce into one long vowel. தீர்க்க சுமங்கலி, a woman blessed with long enjoyment of the marriage state (used in congratulation). தீர்க்கதண்டம், prostration at full length. தீர்க்கதரிசனம், (Chr. us.) prophecy. தீர்க்கதரிசி, a prophet (fem. தீர்க்கதரி சனி). தீர்க்க நித்திரை, long sleep; 2. Euphemistic) death. தீர்க்கமாய்ப்படிக்க, to read distinctly. தீர்க்கயோசனை, தீர்க்காலோசனை, mature consideration. தீர்க்கவசனம், decisive language. தீர்க்கவைரம், cherished hatred. தீர்க்காயுசு, long life. தீர்க்காயுஷ்யம், (a salutation), length of days. தீர்க்காயுதம், a spear, a lance.
காட்சி - Katchi
s. sight, view, vision, பார்வை: 2. an object of sight, visible appearance, தோற்றம்: 3. manifestation of God, தரிசனம்; 4. (logic) evidence of the senses, பிரத்தியக்ஷப்பிரமாணம்: 5. knowledge, அறிவு: 6. beauty, அழகு: 7. nature, தன்மை
காட்சிகொடுக்க, -ஆக, to appear in a vision. காட்சிப்பிரமாணம், perception, means of perception. பிரத்தியட்சப் பிர மாணம். காட்சிப்பொருள், visible concrete things (opp. to கருத்துப்பொருள், abstract things). காணாக்காட்சி, an extraordinary sight or occurrence. பொருள்காட்சிச்சாலை, a museum.
From Digital DictionariesMore