ஆலோசனை - Aaloosanai
s. deliberation, consultation, யோசனை; 2. counsel, advice, புத்தி.
ஆலோசனை கேட்க, to ask advice, to take advice. ஆலோசனை சங்கம், the privy council of a king; council. ஆலோசனை பண்ண, to consult. தீர்க்காலோசனை, deep deliberation. புனராலோசனை, reconsideration.
குழப்பம் - Kuzhappam
s. confusion,
கலக்கம்; 2. commotion, disturbance,
கலகம்; 3. disorder, intricacy of a business,
தாறு மாறு; 4. squall, storm,
கொந்தளிப்பு.
குழப்பக்காரன், குழப்புணி, one that confuses a business. குழப்பத்தைத் தீர்க்க, குழம்பந் தீர்க்க, to set in order, to restore order. குழப்பமாய்க் கிடக்க, to be in confusion, to lie unfinished. குழப்பம் பண்ண, to confuse, to quarrel, to stir up, to disturb. ஊர்்்க்குழப்பம், sedition. கடற்குழப்பம், boisterousness of the sea. மனக்குழப்பம், perplexity.
பசி - Pasi
s. hunger, appetite,
பட்டினி.
எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry. பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க. பசிகொள்ள, to be hungry. பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger. பசிதாகம், hunger and thirst. பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger. பசித் தீபனம், appetite. பசி மந்தித்துப் போயிற்று, my appetite is lost. பசியாறிப் போயிற்று, the appetite is satisfied. பசிவேளைக்கு உதவ, to serve in time of necessary. சிறுபசி, slight hunger.
From Digital DictionariesMore