தினம் - Thinam
s. a day,
நாள்; 2. day-time,
பகல்;
(adv.) daily.
இது ஒரு தினம், this is a special day. தினகரன், the Sun. தினக்கூலி, daily wages. தினசரி, தினசேரி, daily. தினசரிக் கணக்கு, daily accounts. தினத்திரயம், occurrence of three lunar asterisms in one day. தினந்தினம், தினந்தோறும், தினமும், அனுதினமும், daily, every day, day after day. தினமணி, the sun. தினம்பார்க்கிறவன், one that discerns between lucky and unlucky day. தினவர்த்தமானம், daily news. தினாதினம், various days; 2. a special day. தினாவசானம், the end of a day, evening, திவசாவசானம். தினேதினே, தினாந்தரம், daily. இன்றையதினம், this day. சுபதினம், a lucky day. நாளையதினம், to-morrow. நேற்றையதினம், yesterday.
கணம் - Kanam
s. smallness, minuteness, a trifle, சிறுமை; 2. a measure of time equal to 4 minutes; 3. a moment, க்ஷணம்; 4. flock, multitude, class, group, கூட்டம்; 5. demon, devil, பிசாசு; பேய்; 6. globularity, திரட்சி; 7. circle, வட்டம்; 8. trifle, triviality, அற்பம்.
கணநாதர், --நாயகர், the attendants of Siva. கணந்தோறும், every moment. கணபதி, கணேசன், Ganesa, the son of Siva & Parvathi, the god of wisdom. கணப்பொழுது, (க்ஷணப்பொழுது) a moment. இக்கணம், this moment. கணவர், members of a group or assemblage.
காலை - Kaalai
s. time,
பொழுது; 2. the morning,
விடியற்காலம்; 3. early, betimes,
காலமே;
(adv.) 4. life-time;
வாழ்நாள்; 5. the sun, the day time; 6. season, opportunity,
சமயம்.
பேசுங்காலை, when it is spoken of. காலைப்பசியாற, to breakfast. காலை மாலை, morning and evening. காலை மாலை செபம், morning and evening prayers. காலைமாறு, --தோறும், every morning. காலையிலே, in the morning. காலைவெள்ளி, the morning star.
From Digital DictionariesMore