துப்பு - Thuppu
s. provision, food, உணவு, 2. ghee நெய்; 3. dexterity, ability, vigour, சாமர்த்தியம்; 4. search, investigation, ஆராய்ச்சி; 5. experience, அனுபோகம்; 6. aid, help, சகாயம்; 7. purity, சுத்தம்; 8. beauty, excellence, பொலிவு; 9. red, சிவப்பு; 1. red wax, அரக்கு; 11. red coral, பவளம்; 12. hatred, பகை; 13. cleanness, purity, சுத்தம்; 14. weapons in general, ஆயு தப்பொது; 15. a guilt, a mistake, குற்றம்; 16. means, an instrument, துணைக்கருவி; 17. rust, as துக்கு.
துப்பாள், a spy, an approver. துப்புள்ளவன், a dexterous person. துப்புக்கெட்டவன், துப்பற்றவன், a stupid unhandy person, an indecentperson. துப்புத்துரு விசாரிக்க, துப்புத்துரு பிடிக்க, to spy out, to pry into, inquire all about one. துப்புப்பார்க்க, to search, to track a thief. துப்புளி, an arsenal, ஆயுதச்சாலை.
ஆகாரம் - Aakaaram
s. the name of the letter ஆ; 2. meat, food and drink, உணவு; 3. shape form, figure, outward appearance, வடிவம், ஆகிருதி.
ஆகாரத்தட்டு, scarcity of food. அண்டாகாரமான குண்டு, a roundshaped ball. நீராகாரம், liquid food. அர்த்தசந்திராகிருதி, (அர்த்தம், half + சந்திர, moon + ஆகிருதி, shape), half-moon shape.
இரை - Irai
s. food, prey, a bait for fish etc, உணவு; 2. sound, roar as of a current of water, ஒலி; 3. intestinal worm; நாக்குப்பூச்சி.
அக்கினிக்கு இரையாக்க, to destroy by fire. இரைகொடுக்க, -போட, to feed cattle, fowls etc. இரைகொள்ளி, the craw or crop of birds; 2. a glutton. இரைக்குடல், இரைப்பை, stomach. இரைமீட்க, to chew the cud, அசை போட. இரையாக, to become a prey to, to be devoured. இரையெடுக்க, to pick up food to chew the cud.
From Digital DictionariesMore