வீடு - Viidu
s. a house,
இருப்பிடம்; 2. emancipation from births, heavenly felicity,
மோட்சம்; 3. constellation or a house of a planet; 4. leaving,
விடல்.
வீடுகட்ட, to build a house. வீடு குடிபுக, to engage a house etc. வீடு தூங்கி, a hanger-on, a sponger. வீடு (முத்திப்) பேறு, obtaining heaven. வீடும் விளக்குமாய்வைக்க, to provide one a living. வீடெடுக்க, to lay the foundation of a building. வீட்டார், வீட்டு மனுஷர், domestics, people living in the house, members of the family. வீட்டாள், a servant in the house. வீட்டிறப்பு, the eaves of a house. வீட்டுக்காரி, (masc. வீட்டுக்காரன்), the female owner of a house; 2. the wife. வீட்டுக்குடையவன், வீட்டெசமான், the owner of the house, the head of the family. வீட்டுக்குத் தூரம், -விலக்கம், removal outside of the house (as of a menstruous woman). வீட்டுச் சீட்டு, the deeds and bills of sale of a house. வீட்டுப்பெண், a daughter-in-law. வீட்டுவாடகை, rent of a house. வீட்டு வீட்டுக்கு, வீட்டுக்கு வீடு, வீடு வீடாய், from house to house, to each house. வீட்டே (வீட்டுக்குப்) போ, go home. கிரகங்களின் வீடு, the region of the planets.
வண்டி - Vandi
வண்டில், பண்டி, s. cart, a carriage, a bandy.
வண்டிக்காரன், a cartman, a driver. வண்டிக்கால், carriage wheel, a spoke of a wheel. வண்டிக் குடங் கவிழ்ந்தது, the bandy was upset. வண்டிச்சத்தம், வாடகை, cart-hire. வண்டிப்பட்டா, -க்கட்டு, the iron tyre of a cart wheel. வண்டியகவாய், the axle-tree hole. வண்டியிலேற, to step into a carriage. வண்டியின்மேல் போக, to go in a carriage. சக்கடாவண்டி, சகடவண்டி, a common cart. பெட்டிவண்டி, a coach. வில்வண்டி, a carriage with springs.
வாடை -
s. the north wind, வடகாற்று; 2. wind, காற்று; 3. fume, effluvia, scent, வாசனை; 4. a street, தெரு; 5. the side of a street, தெருவின் பக்கம்; 6. a street of herdsmen, இடையர்வீதி; 7. a village of herdsmen, இடைச்சேரி; 8. see வாடகை.
வாடையடிக்கிறது, the north wind blows. நேர் (நெடு) வாடையாய் அடிக்கிறது, due northerly wind blows. வாடையிலே ஓட, to sail with the north wind. சீழண்டை வாடை, the east side of the street.
From Digital DictionariesMore