வாங்கு - Vaangu
s. a kind of dagger, சுரிகை; 2. (for.) a bench, a seat, வாங்குபலகை.
ஈர் - Iir
adj. pref (from
இரண்டு, used before words beginning with vowels, as
இரு is used before consonants), two.
ஈரடி, two lines, doubtfulness, ambiguity. ஈராட்டி, two wives. ஈராயிரம், two thousand. ஈரரசு, diarchy. ஈராறு, twice six. ஈரிணை, two yoke of oxen. ஈரிழை, double thread used in weaving cloth. ஈரிழைச்சல்லா, a muslin whose warp consists of double thread. ஈருயிராயிருக்கிறவள், a pregnant woman as having two lives. ஈரொட்டு, uncertainty doubt; conditional bargain. ஈரொட்டாகச் சாமானை வாங்கு, taks the articles conditionally. ஈரொட்டாகச் சொல்லாதே, do not speak doubtfully. ஈரொட்டாயிருக்க, to be doubtful or uncertain.
ஒன்று - Onru
s. one, one thing.
நான் சொன்னதொன்று, அவன் செய்த தொன்று, I told him one thing and he did another. மனம் ஒன்று வாக்கொன்று, in him word and thought differ. ஒன்று பாவத்தை விடு, ஒன்று நரகத்தில் வேகு, either forsake sin or burn in hell. ஒன்றில் இதைவாங்கு, ஒன்றில் அதை வாங்கு, take either this or that. ஒன்று தங்கிப்போகவேண்டும், you must halt one night on the road. ஒன்றால் ஒன்றுக்குக் குறைவில்லை, I stand not in need of anything whatsoever. ஒன்றடி மன்றடி, colloq. ஒண்ணடி மண் ணடி, promiscuousness, confusion, disorder. ஒன்றன்பால், (in gram.) neuter singular. ஒன்றாய், altogether. ஒன்றான குமாரன், the only son. ஒன்றுக்குப்போக, to make water, ஒன் றுக்கிருக்க. ஒன்றுக்குள் ஒன்று, one among another; mutually; nearest relations. ஒன்றுக்கொன்று, to or for each other. ஒன்றுக்கொன்று வித்தியாசம், different one from another. ஒன்றுபட, to be united; become reconciled. ஒன்றுபடுத்த, to bring about a union, to reconcile. ஒன்றுபாதியாய் விற்க, to sell at halfprice or at a low price. ஒன்றும், (with a neg. verb) nothing. ஒன்றுமற்றவன், a very poor person, a useless person. ஒன்றுமில்லை, there is nothing. ஒன்றுவிட்டதம்பி, (அண்ணன்) a cousin. ஒன்றுவிட்டொரு நாள், every other day, alternate days. ஒன்றேயொன்று, one only. ஒவ்வொன்று, each. ஒவ்வொன்றாய், one by one.
From Digital DictionariesMore