உதவி - Uthavi
s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation.
காலத்தில்செய்த உதவி, timely help. சமயத்திற்கேற்ற உதவி; seasonable aid. உதவியாயிருக்க, --செய்ய, to help. கைக்குதவி, help to the hand, something to lean upon as a staff, an assistant etc. பொருளுதவி, pecuniary help. வாக்குதவி, சொல்லுதவி, help by word, recommendation. உதவிக்காரன், (Christ.) servant, minister, deacon, fem. உதவிக்காரி, deaconess.
காற்று - Kaatru
s. a breeze, wind, வாயு; 2. ghost, evil spirit, ஆவேசம்; 3. breath, சுவாசம்.
காற்றடிக்கிறது, the wind blows. காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind. காற்றாடி, a paper kite; 2. a changeable person. காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen. காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards. காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm. காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind. காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon. காற்றுத் திரும்புகிறது, the wind shifts. காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind. காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire. காற்றோட்டம், ventilation. இளங்காற்று, a gentle breeze. ஊதல்காற்று, பனிக்--, a cold wind. சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind. தென்றல், தென்காற்று, the south wind. நச்சுக்காற்று, noxious air. பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind. மேற்காற்று, the west wind. வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.
விவாதம் - Vivaatham
s. (வி) a dispute, a verbal contention or contest, வாக்குவாதம்; 2. law-suit, வழக்கு.
From Digital DictionariesMore