எண் - Enn
s. thought, estimation, எண்ணம்; 2. number, enumeration, இலக்கம்; 3. arithmetic, கணிதம்; 4. deliberation, counsel, ஆலோசனை; 5. knowledge, அறிவு; 6. mind. மனம்; 7. astronomy, astrology, சோதிட நூல்; 8. logic, தர்க்கம்; 9. fineness of gold or silver, மாற்று; 1. esteem, honour, மதிப்பு; 11. bound, limit, வரையறை.
எண்ணுமெழுத்தும் கண்ணெனத் தகும், arithmetic and grammar may be regarded as eyes. எண்ணுக்குள் அடங்காதது, that which is innumerable, or incomprehensible. எண் கூட்டல், addition. எண் சுவடி, the multiplication table. எண் பெருக்கல், multiplication. எண்ணிலா, எண்ணிறந்த, innumerable.
இறுதி - Iruthi
s. (இறு) end, death, மரணம்; 2. the ending or termination of a word. case or tense, விகுதி; 3. limit, bound, வரையறை.
இன்றிறுதியாகச் செய்யேன், henceforth I will do it no more. இறுதிக் கடிதம், ultimatum. இறுதிக்காலம், time of death; end of all things, ஊழிக்காலம். இறுதியில் இன்பம், (இறுதி+இல்+இன் பம்) everlasting bliss, மோட்சசுகம். இறுதிவேள்வி, funeral oblations.
வரை - Varai
s. measure, limit, a continuance of time,
அளவு; 2. a hill, a mountain,
மலை; 3. a shore, a bank,
கரை; 4. lines
in the fingers, விரலிறை; 5. a wrinkle in the face, வரி; 6. marriage, விவாகம்; 7. the bamboo.
நாளது வரைக்கும், இந்நாள் வரைக்கும், up to this day. ஒரு மாசவரையிலே, within or during a month. அரைவரையில் போ, go as far as that. வரையற, wirhout remainder, abundantly. வரையறுக்க, to determine or specify a number; 2. to decide, to settle; 3. to surround, encircle. வரையறை, a boundary. வரையாடு, a mountain sheep. வரையுறுத்த, to bend, to make crooked. வரையோடு, the mouth of a broken pot placed on the top of a mortar to keep the grain from scattering.
From Digital Dictionaries