காற்று - Kaatru
s. a breeze, wind, வாயு; 2. ghost, evil spirit, ஆவேசம்; 3. breath, சுவாசம்.
காற்றடிக்கிறது, the wind blows. காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind. காற்றாடி, a paper kite; 2. a changeable person. காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen. காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards. காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm. காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind. காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon. காற்றுத் திரும்புகிறது, the wind shifts. காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind. காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire. காற்றோட்டம், ventilation. இளங்காற்று, a gentle breeze. ஊதல்காற்று, பனிக்--, a cold wind. சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind. தென்றல், தென்காற்று, the south wind. நச்சுக்காற்று, noxious air. பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind. மேற்காற்று, the west wind. வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.
ஊமை - Oomai
s. dumbness, muteness, மூகம்; 2. a dumb person, மூகன்; 3. a mongoose, கீரி; 4. an ancient war-drum, ஒரு வாத்தியம்.
ஊமை கண்ட கனாப்போல, like the dream of a dumb person. ஊமைக்காயம், internal injury from blows (without wound on the skin) (not revealable). ஊமைக்கட்டி, a blind boil; colloquially, mumps. ஊமைத்தனம், dumbness. ஊமைத் தேங்காய், a cocoanut whose water does not sound when shaken. ஊமையன், ஊமன் (fem. ஊமச்சி, ஊமைச்சி) a dumb person. ஊமை யெழுத்து, a consonant, being mute; 2. the mystic syllable "Om".
மேளம் - Meelam
s. a drum, பறை; 2. a collection of musical instruments.
மேளக்காரன், one that beats the drum or plays on other musical instruments. மேளங்கொட்ட, மேளஞ்சேவிக்க, மேள மடிக்க, to beat the drum. மேளமுழக்கம், the sound of a drum. மேள வாத்தியங்கள், drum and other musical instruments.
From Digital DictionariesMore