கூர்மை - Kuurmai
s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு.
கூரிய, கூர் adj. sharp. கூரியது, that which is sharp. கூரியவாள், a sharp sword. கூரியன், a judicious and skilful man. கூர்ங்கண், sharp, piercing eyes. கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument). கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing. கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently. கூர்ம்பல், a sharp tooth. புத்திக்கூர்மை, intellectual acuteness.
வெடி - Vedi
வெடில், s. the report of a gun; 2. a shock, crack, thunder, இடி; 3. good smell, நறுமணம்; 4. fear, அச்சம்; 5. an open field, வெளி.
வெடிக்கிரந்திப்புண், a venereal ulcer. வெடிக்கயிறு, a quick-match or lunt. வெடி சுட, -தீர, -போட, to fire a gun. வெடி நாற்றம், a bad smell. வெடிப் பட்டை, a fire-work. வெடி மருந்து, gun-powder. வெடியுப்பு, வெடிலுப்பு, salt-petre. வெடியெழும்பிற்று, the report of the gun sounded.
உதடு - Uthadu
s. lip, அதரம்; 2. brim, விளிம்பு; 3. edge of a wound, வெட்டுவாய்.
உதடன் (fem. உதடி), one that has a thick & projecting lip, a blubberlipped person உதடுதுடிக்க, to quiver as the lips in anger. உதட்டுப்புண், a sore on the lip. உதட்டுவெடிப்பு, a crack on the lip. உதட்டைப்பிதுக்க, to pout, to shoot out the lower lip by way of negation or contempt. கீழுதடு, the lower lip. x மேலுதடு, the upper lip. மூளியுதடு, a lip of which a part is wanting; a hare-lip.
From Digital DictionariesMore