சிற - cira
VII. v. i. be elegant; beautiful, splendid, சிங்காரமாயிரு; 2. be peculiar, distinguished, விசேஷி, 3. excel, surpass, exceed, மேற்படு; 4. be auspicious or lucky; 5. be indispensable, அவசியமாயிரு.
சிறந்த நடக்கை, exemplary conduct. சிறந்தவன், (pl. சிறந்தோர்), a distinguished person. சிறப்பாடு, v. n. excellence, splendour. சிறப்பு, v. n. the distinctive feature of a thing, விசேஷம்; 2. ornament, magnificence, elegance, beauty, அலங்காரம்; 3. abundance, excess, மிகுதி; 4. wealth, happiness, honours. சிறப்புச் செய்ய, -ப்பண்ண, same as சிறப்பிக்க. சிறப்புப்பாயிரம், a special preface (distinguished from பொதுப்பாயிரம்). சிறப்புப் பெயர், special name (opp. to பொதுப் பெயர்); 2. title, பட்டப் பெயர். சிறப்பு விதி, special rule (opp. to பொது விதி, general rule). கல்வியிற் சிறந்தவன், one eminent for learning. வெற்றி சிறக்க, to triumph. சிறப்பெடுக்க, to celebrate a festival.
விசேஷம் - vicesam
விசேடம், s. peculiarity, particular thing or matter, லட்சணம்; 2. excellence, சிறப்பு; 3. news, செய்தி; 4. a figure of rhetoric, அலங்காரம்; 5. difference, distinction, விகற்பம்; 6. a word, a narrative, சொல்; 7. remainder, சேஷம்.
விசேஷதினம், a festival day. விசேஷமாய், especially, particularly. விசேஷமானது, விசேஷித்தது, that which is notable, excellent, eminent or conspicuous. விசேஷமென்ன, what is the news? எழுத்து விசேஷமாய், by letter. சுவிசேஷம், good news. 2. (Chr. us.) the Gospel. வாய்விசேஷம், a rumour. வாய் விசேஷமாய், by word of mouth.
விசேஷி - vicesi
விசேடி, VI. v. t. distinguish, make special, make prominent, சிறப்பி; 2. v. i. excel, surpass, மேற்படு.
அதிலும் இது விசேஷித்தது, this is preferable or superior to that. விசேஷித்த காரியம், the chief thing.
From Digital DictionariesMore