வில் - Vil
s. a bow,
தனுசு; 2. a spring of a clock etc; 3. the 19th lunar mansion
மூலநாள்; 4. light,
ஒளி; 5. the
banner of the Sera kings, சேரன் கொடி.
வில்லம்பு, the arrow discharged from a bow. வில்லவன், விற்சேரன், an epithet of the Sera kings, the device on whose banner was a bow, சேரன். வில்லாண்மை, dexterity with the bow, archery. வில்லார், வில்லியர், hunters. வில்லாளன், வில்லாளி, விற்காரன், an archer. வில்லெய்ய, வில்போட, to shoot with a bow. வில்லேருழவர், warriors, படைவீரர். வில்வாங்க, -ஏறிட, to bend a bow. வில்வித்தை, archery. விற்காரன், an archer. விற்கால், a bow-leg. வின்னாண், a bow-string.