குடி - Kudi
VI. v. t. drink, பருகு; 2. inhale, உறிஞ்சு; 3. suck, முலையுண்ணு; 4. take medicine, swallow; 5. absorb, imbibe, உட்கொள்; 6. smoke as tobacco.
பூமி மழையைக் குடிக்கிறது, the earth absorbs the rain. நல்லபால் குடித்து வளர்ந்தான், he has been virtuously brought up. குடி, v. n. drunkenness; drinking; 2. s. drink, beverage. குடிகாரன், குடியன், a drunkard. குடித்தல், v. n. drinking. குடிநீர், a medicinal decoction; drinking water. குடிவெறி, intemperance, intoxication. சுருட்டு, (புகை) குடிக்க, to smoke a cigar.
நீர்வாழுஞ்சாதி - nirvazuncati
aquatic creatures; 2. fishermen.
நீர்விட, -இட, to make water. நீர்விட்டான், நீர்மீட்டான், a kind of medicinal creeper, தண்ணீர்விட் டான், asparagus racemosus. நீர்விட்டான்கிழங்கு, the root of the creeper. நீர்விழ, to exist as water in a stone, giving it lustre. நீர்வேட்கை, thirst தாகம். இளநீர், cocoanut water; 2. tender cocoanut. உமிழ்நீர், spittle. குடிநீர், water to drink, a decoction. குளிநீர், water to bathe. சிறுநீர், urine. சேற்றுநீர், muddy water. தண்ணீர், cold water, see separately. வெந்நீர், warm water.