பிறகு - Piragu
adv. afterwards, after, பின்பு; 2. behind, பின்புறமாய்.
அதின் (அதுக்குப்) பிறகு, thereafter. ஒருவர்பிறகாலே ஒருவராய், one after another. பிறகிட, to get behind, to fall in the rear; 2. to be passed by, பிற்பட; to be excelled or surpassed, தோற்க; 4. to be past, as time or an event, பின்வா. பிறகுவா, come after a little while, come behind me. பிறகிட்ட, that which is passed கழிந்த. பிறகே, பிறகாலே, (with gen. or dat.) behind, back. என் (எனக்குப்) பிறகே, behind me.
குறை - Kurai
II. v. i. be short, be missing, wanting, எஞ்சு; 2. diminish, grow scarce, less, dear, சிறுகு; 3. be lowered in rank, estimation etc. கெடு; 4. droop in affliction, வருந்திவாடு; 5. be cut off, வெட்டப்படு; 6. be elided as a letter (Gram.) எழுத்துக்கெடு.
குறைச்சல், (com. குறைதல்), v. n. defect, want, scarcity, dearness. அது குறைச்சலல்ல, it is not dear; it is not less than what is required. குறைச்சலாய் வாங்க, to buy dear; to buy less than what is wanted. குறைச்சலாய்ப், (குறைவாய்) பேச, to speak ill or depreciatingly of a person. குறைந்தபட்சம், at least, not less than. குறையப்பண்ண, to diminish. குறை (குறைந்த) மரக்கால், a scant measure. குறைவு, v. n. defect, poverty, reduction. குறைவானது, that which is defective or unbecoming. குறைவுபடுத்த, to disgrace; to minimise. ஏறக்குறைய, சற்றேறக்குறைய, more or less, about. கொஞ்சங் குறைய, almost.
பதில் - Bathil
particle (Ar.), in lieu of, instead of, ஈடு (with dative); 2. s. reply, விடை.
அதுக்கு (அவனுக்கு) ப்பதிலாக, instead of it (him.) பதிலாளி, பதிலாள், a substitute. பதிலுக்குப் பதில், like for like, retaliation. பதிலுக்குப்பதில் செய்ய, --பண்ணிப் போட, to recompense, to retaliate. பதிலுத்தரம், answer, reply. பதிலுபகாரம், recompense. பதில்வைக்க, to substitute. பதிற்சீட்டு, a copy or duplicate of a note. பதிற்செய்ய, to recompense, to retaliate.
From Digital DictionariesMore