அறி - Ari
v. t. know, understand, comprehend, தெரி, உணர்.
தன்னை, (or புத்தி) யறிந்த பெண், a young marriageable girl. அறிகுறி, sign, token. அறிமுகம், s. acquaintance, recognised person. எனக்கு அறிமுகமானவன், an acquaintance of mine. அறிமுகமில்லாத ஊர், a town where you know nobody. அறிமுகம் பண்ண, to contract friendship. அறியப்படுத்த, -க் கொடுக்க, make known, inform. அறியாமை, ignorance. அறிவாளி, அறிவாகரன், அறிஞன், a learned man. அறிவில்லாமை, அறிவின்மை அறிவீனம், v. n. ignorance. அறிவில்லான், அறிவீனன், அறிவிலி, an ignorant man. அறிவு, v. n. knowledge. அறிவு புகட்ட, to teach. அறிவு மயங்க, to lose conciousness, to be bewildered. சிற்றறிவு, imperfect knowledge x பேர றிவு, perfect knowledge. நுண்ணறிவு, minute, exact knowledge. சர்வ அறிவு, omniscience. அறிக, (optative), May you know; know. அறிக்கைப் புத்தகம், (புஸ்தகம்) chr. Symbolic book. அறிமுகம், acquaintance; known face.
இருட்டு -
s. darkness, இருள்; 2. obscurity of mind, அறியாமை
இருட்டுப்பட, to get dark. பின்னிருட்டுக்காலம், the time after the new moon, when it is dark in the latter part of the night ( x முன் னிருட்டுக் காலம்), the time after the full moon, when it is dark in the former part of the night.)
முத்தி -
s. a kiss, முத்தம்; 2. final beatitude, salvation, eternal bliss, மோட்சம்.
முத்தி (முத்தம்) இட, -கொடுக்க, to kiss. முத்திபெற, -அடைய, to obtain salvation. முத்திப் பேறு, attainment of bliss. முத்திமார்க்கம், -நெறி, way to heaven. முத்தி விக்கினம், -விலக்கு, the three obstacles to முத்தி, - 1. ignorance, அறியாமை; 2. doubt, ஐயம் and 3. perversion, திரிபு.
From Digital DictionariesMore