நிறுத்து - Niruthu
III. v. t. raise, erect, நிற்கச்செய்; 2. detain, stop, discontinue, cause to stand still, தடு; 3. defer, put off, தாமதப்படுத்து; 4. put an end to, cause to cease, முடியச்செய்; 5. reestablish, restore one to better circumstances, re-form, சீர்திருத்து; 6. reinstate, place one in office; 7. establish, maintain, support, ஸ்தாபி; 8. make proper pauses, accent, emphasis, cadence etc. in reading or singing.
நீ நிறுத்து, அவன் சொல்லட்டும், stop, let him speak. நிறுத்தல், v. n. postponing; 2. see under நிறு; 3. as நிறுப்பு which see. நிறுத்திப்போட, -வைக்க, to stop, to delay, to adjourn. நிறுத்தி வாசி, read slowly. விளக்கை நிறுத்த, to put out light.
குற்றம் - Kuttram
s. fault, பிழை; 2. guilt, crime, தீங்கு; 3. stigma, பழி; 4. bodily deformity, அங்கக்குறை; 5. penalty, fine, அபராதம்.
குற்றங்காண, to find fault, to pick holes. குற்றங்குறைகள், grievances. குற்றச்சாட்டு, --ச்சாட்டம், accusation. குற்றஞ்சாட்ட, --சுமத்த, to accuse; to incriminate. குற்றஞ் சுமக்க, to be guilty. அவன்மேல் குற்றஞ் சுமந்தது, he has been found guilty. குற்றத்தை மறைக்க, to deny the crime, to hide a fault. குற்றமின்மை, --மில்லாமை, innocence. குற்றம் செய்ய, --பண்ண, to commit a fault or crime. குற்றம்பார்க்க, --பிடிக்க, to find fault. குற்றவாளி, an offender, one who is found guilty, a malefactor, a criminal.
குறி - Kuri
VI. v. t. appoint, determine, design, நியமி; 2. place a mark, note down, குறித்துக்கொள்; 3. intend, purpose கருது; 4. denote, refer to, சுட்டிக் காட்டு; 5. foretell, presage, முன்ன றிவி; 6. blow as a conch, sound, ஊது.
இதிலே அவன் குறிக்கிறதென்ன? what does he mean by this? குறித்த காலத்திலே, at the appointed time. குறித்த தொகை, the sum specified. குறித்து, concerning, about. அதைக்குறித்துச் சொன்னான், he spoke about it, or concerning it, he described it. அவனைக்குறித்து, concerning him. குறித்துவைக்க, -க்கொள்ள, to mark, to set a mark by, to note a thing in a book. குறிப்பிக்க, (caus.) to signify; to intimate; 2. to get noted down. முன்குறித்தல், முன்குறிப்பு, (christ. us.) predestination.
From Digital DictionariesMore