காற்று - Kaatru
s. a breeze, wind, வாயு; 2. ghost, evil spirit, ஆவேசம்; 3. breath, சுவாசம்.
காற்றடிக்கிறது, the wind blows. காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind. காற்றாடி, a paper kite; 2. a changeable person. காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen. காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards. காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm. காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind. காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon. காற்றுத் திரும்புகிறது, the wind shifts. காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind. காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire. காற்றோட்டம், ventilation. இளங்காற்று, a gentle breeze. ஊதல்காற்று, பனிக்--, a cold wind. சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind. தென்றல், தென்காற்று, the south wind. நச்சுக்காற்று, noxious air. பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind. மேற்காற்று, the west wind. வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.
தோற்றம் - Thoorram
s. (தோன்று) appearance, spectacle, காட்சி; 2. rise, beginning, origin, துவக்கம்; 3. birth, பிறப்பு; 4. things created, visible objects; 5. idea, எண்ணம்; 6. phenomena, நூதனக் காட்சி; 7. offspring, a son, மகன்; 8. semblance, சாயை; 9. vision, prospect, sight, தரிசனம்; 1. debut, entrance on the stage as a character வருகை; 11. a phantom, an illusion, ஆவேசம்; 12. a fit, seasonable word, ஏற்றமொழி; 13. a word, சொல்; 14. vigour, strength, வலி; 15. praise, eulogy, புகழ்.
தோற்றமாக, to appear, தோற்றப்பட; 2. to appear on the stage. தோற்றமானவன், தோற்றப்பட்டவன், a celebrated, conspicuous man. நிலாத்தோற்றம், rising of the moon. தோற்றக்கவி, a verse sung just before the arrival of an actor on the stage. தோற்றத்தரு, the verse and tune sung at the appearance of a person on the stage, who dances round the area while it is sung.
ஆவேசம் -
s. spectre, ghost,
ஆவி; 2. the entrance of a demon into a person for the purpose of uttering oracles,
சன்னதம்; 3. the fury or
madness of a possessed person; 4. the grimaces of a person in ecstasy, religious frenzy, மருள்.
ஆவேசம் ஏறுகிறது, --வருகிறது, the paroxysm of religious frenzy comes upon a person. There are வீராவேசம், கோபாவேசம், உக்கிராவேசம், and such other fine combinations to denote excessive வீரம் கோபம் உக்கிரம். ஆவேச வணக்கக்காரர், animists. ஆவேசமுண்டுபண்ணும் வார்த்தை, inspiring words.
From Digital DictionariesMore