இனி - Eni
adv. hence forth; hereafter, இது முதல்; 2. now, immediately, presently, இப்பொழுது, உடனே; 3. from here onwards (place) இப்பால்.
இனி என்ன செய்வாய்? what can you do further? இனி வேண்டியதில்லை, it is no longer required. இனிமேல், இனிமேலைக்கு, in future, இன்னமே, (colloquial). இன்னினி, even now, without delay, "இன்னினியே செய்க அறிவினை" (நாலடி)
பொழுது - Pozhuthu
போது, s. time, காலம்; 2. portions of time, வேளை; 3. the sun, சூரியன்.
ஒரு (இரண்டு) பொழுதுசாப்பிட, to eat once (twice) a day. பொழுதுகட்டுகிறது, it seems we shall have rain today, the sun being overcast with clouds. பொழுதுசாய்கிறது, -சாய்ந்துபோகிறது, -இறங்குகிறது, -பூதுகிறது, -பூந்து போகிறது, the sun sets, the day declines. பொழுதுசாய (vulg. பொழுசாய, பொசாய) adv. in the evening; inf. to decline as the sun. பொதுபோக, -பட, adv. at sunset. பொழுதுபோக்க, to pass or idle away time, to lounge. வீண் பொழுதுபோக்க, to trifle away time. பொழுது போக்காயிருக்க, to make a merry day, to delay from day to day. பொழுதுவணங்கி, the sun flower, சூரியகாந்திப்பூ. பொழுது விடிகிறது, the day breaks, the sun rises. அப்பொழுது, இப்பொழுது, எப்பொ ழுது, see separately. இறங்குபொழுது, the afternoon. ஏறுபொழுது, the forenoon. சிறு (அறு) பொழுது, the six divisions of the day (from sunset to sunset). They are மாலை, யாமம், வைகறை, விடியல் (காலை), நண்பகல், எற்பாடு (opp. to பெரும்பொழுது, the six seasons of the year; which see under பருவம்).
இன்று - Indru
s. & adv. to-day, at present, now இந்நாள், இப்பொழுது.
இன்றுகாலமே வந்தான், he came this morning. இன்றுமுதல், from this day. இன்றைக்கு வருவான், he will come to-day. இன்றைக்குப்பத்தாம் நாள், ten days hence. இன்றைக்குப் பின்னைக்கு என்று போக்கு சொல்ல, to put off a thing from day to-day. இன்றை, to-day, belonging to this day, இன்றை நாள். இன்றைத்தினம், --நாள், இன்றையதினம், இன்றைத்தினம், this day. இன்றையில் வரைக்கும், hitherto; until this day.
From Digital Dictionaries