உதவு - Uthavu
III. v. t. help, assist, aid, துணை செய்; 2. give, contribute, கொடு; 3. report, tell, inform, சொல்லு; v. i. be possible, கூடியதா; 2. be of use, பயன்படு (இது மருந்துக்குதவும்.); 3. be at hand, கைக்குதவு.
கைக்குதவாது, it is not at hand. சமயத்துக்கு உதவ, to be of help in an emergency. இப்போது பணம் உதவாதே போயிற்று, at present I have no money at hand. உதவாத எழுத்து, bad writing. உதவாமல் போக, to be of no service. உதவாக்கட்டை, உதவாக்கடை, உதவாக் கரை, a worthless fellow. உதவல், v. n. giving.
காலி - Kaali
s. Point de Gall; 2. herd of cows, பசுக்கூட்டம்; 3. (Hind.) vacancy, emptiness, ஒழிவு; 4. same as காலாடி (see under கால்).
இப்போது காலியில்லை, there is no vacancy at present. காலிமாடு, காலியமாடு, cattle kept continually in the fields or woods under a shepherd. காலியான வீடு, a vacant, unoccupied house. காலிப்பயல், a vagabond, a worthless lad. கன்றுகாலி, cattle young and old.
போது -
s. (contr. of போழ்து) time, பொழுது; 2. (with a participle) when, while; 3. a flower bud. It signifies never when joined with உம் followed by a negative as in அவன் ஒருபோ தும் வரமாட்டான், he will never come.
அவன் வருகிறபோது, when he comes. முன்னொருபோது, at a former time. அப்போது (அப்போ), இப்போது, எப் போதும், see, அப்பொழுது etc.
From Digital DictionariesMore