உச்சம் - Ussam
s. elevation, perpendicular height, greatness, உயர்ச்சி; 2. the point overhead, zenith, தலைக்குநேரான ஆகாசமுகடு; 3. treble in music, வல் லிசை; 4. top, extreme point, நுனி; 5. (Astr.) exalted position of a planet.
சூரியன் உச்சத்தில் இருக்கிறது, the sun is right over the head. உச்சமாய்ப் பாடுகிறான், he sings treble. உச்சந்தலை, the crown or top of the head. உச்சராசி, (astr.), exalted sign of a planet fortunate natal sign. திருச்சபை உச்சநிலையில் நின்ற பருவம், the time when the churh was in its zenith.
கவி - Kavi
II. v. t. cover or overspread (as a cloud or a tree), மூடு; 2. surround, invest, வளை; v. i. bend in or over, வளை; 2. be intent upon a business, be eager, விருப்பமாயிரு.
மேகங்கள் மலைச்சிகரத்தைக் கவிந்து கொண்டன, the clouds have covered the peak of the hill. கூரை கவிவாய் இருக்கிறது, the roof is too much depressed. கவிந்து, (கவிஞ்சு) கேட்க, to bid eagerly for a thing. கவிதல், கவிவு, கவிகை, v. n. bending, being concave. கவிகை, s. liberality; an umbrella; good and evil.
கொடு - Kodu
VI.
v. t. give, grant, bestow,
ஈ; 2. bring forth,
பெற்றெடு; 3. abuse roundly; 4. an auxiliary as in
சொல் லிக் கொடு.
யானைக்குக் கவளங்கொடு, give balls of rice to the elephant. கொடுக்கல் வாங்கல், dealing, lending and borrowing. அவனுக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது, he and I have dealings together; he and I have money dealings with each other. கொடுத்துவிட, to restore. கொடுபாடு, கொடுதலை, giving, paying off. கொடுப்பனை, கொடுப்பினை, giving in marriage, intermarriage, see கொள் வினை. கொடுப்பு, v. n. giving. ஒத்துக் கொடுக்க, to recompense, to compensate. காட்டிக் கொடுக்க, to betray. சாகக் கொடுக்க, to lose by death, as a mother her child etc. சொல்லிக் கொடுக்க, to instruct, to teach. நிறங் கொடுக்க, to tinge, give a colour. பெண் கொடுக்க, to give a girl in marriage. முடித்துக் கொடுக்க, to finish a thing for one. வாங்கிக் கொடுக்க, to buy for another. அவனுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொடுத் தேன், I bought a horse for him. விட்டுக் கொடுக்க, to give up, to relax.
From Digital DictionariesMore