இல் - Il
s. place இடம்; 2. house, வீடு; 3. domestic life, இல்லறம்; 4. a wife, மனைவி; 5. zodiacal sign, இராசி; 6. a sign of the 7th case, as in வீட்டி லிருந்தாள், she was at home; 7. a sign of the 5th case as in அரசரிற் பெரியர் அந்தணர்; the Brahman caste is superior to the royal; 8. clearing-nut தேத்தாங்கொட்டை.
இல்லடைக்கலம், the act of depositing or taking refuge in a house. இல்லவன், இல்லான், (fem.) இல்லவள், இல்லாள், the husband, the head of the family. இல்லறம், domestic life, duties of a household, domestic virtues. இல்லிடம், dwelling. இல்லக்கிழத்தி, wife. இல்லொழுக்கம், the practice of the household duties. இல்வாழ்க்கை, --வாழ்வு, domestic life. இல்வாழ்வான், a family man. இற்பிறப்பு, noble birth. இற்புலி, a cat.
இல்லை - Illai
defect. verb from the root இல், no, not, there is not; 2. neg. auxiliary verb
எனக்குப் பணம் இல்லை, I have no money. அவன் வந்ததில்லை, அவன் வரவில்லை, he is not come. வருகிறாயா இல்லையா, வருகிறாயோ இல் லையோ, will you come or not? இல்லை என்ன, to say no, to deny. இல்லையாகில், --யெனில், --யென்றால், -- யாயின், --யேல், if not, else, otherwise. இன்னதென்றில்லை, no matter what. ஒருகாலுமில்லை, never. ஒன்றுமில்லை, nothing. பரிச்சேதமில்லை, துப்புறவில்லை, இல்லவே யில்லை, not at all. அதைப்பற்றிச் சொல்ல நம்மால் இல்லை, அதைப்பற்றி நான் சொல்வதற்கில்லை, in the sense of impossibility, and impropriety.
பாதகம் - Paathakam
s. (poet. பதகம்) a crime, a grievous sin, துரோகம்.
பாதகஞ்செய்ய, to commit sin. பாதகன், (fem. பாதகி) a criminal, a sinner. பஞ்ச பாதகம், பஞ்ச மகா பாதகம், the five worst sins:- கொலை, murder; 2. காமம், lust; 3. கள்ளுண்ணல், drinking toddy; 4. களவு, theft; 5.குருநிந்தை, abuse of the guru. அதனால் பாதகம் இல்லை, it does not matter, it will not injure or be harmful.
From Digital DictionariesMore