இல்லை - Illai
defect. verb from the root இல், no, not, there is not; 2. neg. auxiliary verb
எனக்குப் பணம் இல்லை, I have no money. அவன் வந்ததில்லை, அவன் வரவில்லை, he is not come. வருகிறாயா இல்லையா, வருகிறாயோ இல் லையோ, will you come or not? இல்லை என்ன, to say no, to deny. இல்லையாகில், --யெனில், --யென்றால், -- யாயின், --யேல், if not, else, otherwise. இன்னதென்றில்லை, no matter what. ஒருகாலுமில்லை, never. ஒன்றுமில்லை, nothing. பரிச்சேதமில்லை, துப்புறவில்லை, இல்லவே யில்லை, not at all. அதைப்பற்றிச் சொல்ல நம்மால் இல்லை, அதைப்பற்றி நான் சொல்வதற்கில்லை, in the sense of impossibility, and impropriety.