தொண்டு - Thonndu
s. service, slavery, அடிமை; 2. devotedness, தேவ ஊழியம்; 3. antiquity, old times, பழமை; 4. a slave, a servant, தொண்டன்; 5. a block of wood suspended from the neck of an animal to prevent it from passing through hedges, தொண்டுக் கட்டை; 6. the name of a plant; 7. a kind of snipe, கோழியுள்ளான்; 8. nine, ஒன் பது.
தொண்டு (தொண்டூழியம்) செய்ய, to serve, to wait on. தொண்டுதுரவு, services, பணிசெய்கை; 2. concerns or affairs of persons, as watched by a thief or a spy.
இறுதி - Iruthi
s. (இறு) end, death, மரணம்; 2. the ending or termination of a word. case or tense, விகுதி; 3. limit, bound, வரையறை.
இன்றிறுதியாகச் செய்யேன், henceforth I will do it no more. இறுதிக் கடிதம், ultimatum. இறுதிக்காலம், time of death; end of all things, ஊழிக்காலம். இறுதியில் இன்பம், (இறுதி+இல்+இன் பம்) everlasting bliss, மோட்சசுகம். இறுதிவேள்வி, funeral oblations.
ஊழி - Uuzhi
s. a long period of time, eternity, நெடுங்காலம்; 2. the end of the world, யுகமுடிவு; 3. a demon, பிசாசம்; 4. world, உலகம்; 5. fate, விதி.
நீடூழி வாழ்க, may you live long. உனக்கூழிவர, may you die of a pestilence. ஊழிக்காய்ச்சல், ஊழிநோய், pestilence, an epidemic supposed to be produced by a malignant demon. ஊழிக்காற்று, ஊழிக்கால், a destructive wind that prevails at the end of the world; 2. a demon that causes pestilence. ஊழித்தீ, submarine fire, வடவை. ஊழி யூழிக்காலம், from age to age, eternity.
From Digital DictionariesMore