எதிர் - Ethir
(எதிரானது) s. that which is opposite or in front, முன்னிருப்பது; 2. similitude, comparison, ஒப்பு; 3. futurity, வருங்காலம்; 4. rivalry, எதிரி டை; 5. target, aim, இலக்கு; 6. adv. in front முன்.
எதிரறை, an opposite room. எதிராக, எதிர் முகமாக, opposite, face to face. எதிராளி, adversary, opponent. எதிரி, the defendant in a law suit; 2. same as எதிராளி. எதிரிடை, எதிர் முகம், opposition, what is against, what is equivalent. எதிரிடையாய்ப் பேச, to dispute, contradict. அதுக் கெதிரிடையாக, அதுக்கெதிரிட மாக, அதுக்கெதிராக, to the contrary. எதிருத்தரம், எதிர்மொழி, எதிருரை, an answer, a reply, a rejoinder, a retort. எதிரே, எதிரிலே, before, in front. எதிரொலி, an echo. எதிர் குதிர், obverse, மறுதலை. எதிர்கொண்டு போக, -கொண்டழைக்க, to go to meet and receive one. எதிர்க் கட்சி, the opposite party. எதிர் செலவு, courteous advance to welcome one. எதிர்ச்சீட்டு, -முறி, a note of hand given for another that is lost, a counterbond. எதிர் நிற்க, to stand before one. எதிர் பாப்பு, Anti-Pope (christ.) எதிர் பார்க்க, (with dat.) to wait for an expected person, to hope for a thing, to be in expectation of a thing. எதிர்ப்பட, to meet by chance. எதிர் மறுப்பவர், Protestants (christ.) எதிர் மறை, (in gram.) negative form of expression. எதிர் மறை வினை, a negative verb. எதிர் வர, to meet, to oppose. எதிர் வாதி, a defendant in law. எதிர் வீடு, opposite house.
பிரதி - Pirathi
pref. & s. instead of, in lieu of; 2. substitute, a deputy, பதிலாள்; 3. contrariety, opposition, எதிர்; 4. copy, transcript, சவாது.
அதுக்குப் பிரதியாய், instead of it. பிரதி கருமம், retaliation, retribution. பிரதிகிரகணம், taking a mortgage or pledge. பிரதிகூலம், ill-success disadvantage (opp.) to அனுகூலம்). பிரதி கூலியம், opposition, எதிரிடை. பிரதிகொடுக்க, to give an equivalent. பிரதிக்கினை, confession, solemn declaration; 2. promise, pledge; 3. the proposition to be proved. பிரதிசாபம், a counter-curse. பிரதி தினம், day by day. பிரதி தொனி, சத்தம், echo. பிரதிபட்சன், an opponent. பிரதிபதம், a synonym பரியாயச்சொல். பிரதிபந்தம், -பந்தகம், an obstacle, an impediment. பிரதிபலம், சாயை, reflection as from water or a looking-glass. பிரதி பாதிக்க, to conclude, to determine, to define. பிரதிபோதம், teaching, instruction. பிரதியுத்தரம், -வசனம், see பிரத்தியுத் தாரம், an answer. பிரதி யுபகாரம், -தானம், recompense. பிரதியெழுத, to take a copy. பிரதிவாதம், defence. பிரதிவாதி, a defendant, a respondent. பிரதிவிம்பம், -பிம்பம், reflection, shadow. பிரதிவிம்பிக்க, to be reflected.
குதலை -
s. the prattle of a child, மழலைச் சொல்; 2. fond talk of females, மாதர் மொழி; 3. noisy objection, எதிரிடை; 4. a simpleton, அறிவிலி.
குதலைகொஞ்ச, to prattle. குதலைவார்த்தை, --ப்பேச்சு, prattling words; an altercation.
From Digital DictionariesMore