ஏது -
(ஹேது) s. cause, origin, காரணம்; 2. means, instrument, எத்தனம்; 3. pecuniary ability, திராணி; 4. augury, நிமித்தம்.
ஏதன், one who is the first cause, மூல காரணன். ஏதிலார், (ஏது+இலார்). the poor, the destitute. ஏதுகாட்ட, to show reason. ஏதுவாக, --வாயிருக்க, to be adapted to; to be liable to. பாவத்துக்கு ஏதுவான காரியம், a thing that leads to sin. நஷ்டத்துக் கேதுவாயிருக்க, to be in danger of loss. ஏதுவானவன், a man of property. மரண ஏதுக்கள், causes or forebodings of death.
ஏதில் - etil
s. foreignness, அன்னியம்; 2. vicinity, அயல்.
ஏதிலார், strangers, foreigners, enemies, neighbours; 2. prostitutes, பரத்தையர்.