அபிப்பிராயம் - Apippiraayam
s. the inmost thoughts, the secrets of the heart, உட்கருத்து; 2. intention, நோக்கம்; 3. an opinion, meaning, எண்ணம்.
ஒருவன் பேரிலே அபிப்பிராயமாயிருக்க, to remember one (mostly with affection), suspect. இந்த வார்த்தைக்கு அபிப்பிராயம் என்ன? to what does this word allude? what does this word denote?
சலி - Sali
VI. v. i. be sorry, grieve, துக்கப்படு; 2. grow tired, disgusted or dejected; இளைந்தோய்; 3. wave, shake, அசை, v. t. hate; 2. sift, சலி.
அது எனக்குச் சலித்துப் போயிற்று, I am grown weary of it. சலிக்கச்சாப்பிட, to eat till one grows tired. சலித்துக்கொண்டிருக்க, சலிப்பாயிருக்க, to be sad, melancholy or dejected. ஒருவன்மேல் சலித்துக்கொள்ள, to be displeased with a person. சலிப்பு, v. n. disgust, displeasure, grief, weariness. சலிப்பின்மேல், out of disgust. சலிப்பாற, சலிப்புத்தீர, to be consoled. சலிப்பாற்ற, சலிப்பாறவைக்க, to console, to comfort, to mitigate. கைசலிக்க எழுத, to write till the hand is tired. மனஞ்சலிக்க, to be grieved. மனஞ்சலியாதவன், one who is unwearied, indefatigable. வாய்சலிக்கத் திட்ட, to abuse till the mouth aches.
அர்ப்பணம் - arppanam
{*}s. making an oblation, sacrifice, நிவேதனம்.
ஒருவன் தன்னைக் கடவுளுக்கு அர்ப் பணம் செய்ய (பண்ண), to devote oneself to God.
From Digital DictionariesMore