அழு - Azhu
I. v. i. weep, cry, கண்ணீர் விடு; 2. lament, புலம்பு; 3. cry as animals in distress or anxiety, கத்து; 4. waste, வீண்செலவு செய்.
ஒருவனை நினைத்து அழ, to bemoan one. அழுகள்ளி, a hypocritical weeper. அழுகுணி, a crying person. அழுகுரல், sound of weeping. அழுகை, அழுதல், v. n. weeping.
சிந்து -
III. v. t. spill, shed, scatter, diffuse, சிந்திப்போடு; 2. remove, நீக்கு; 3. spend, waste, செலவழி; 4. cut off, வெட்டு; v. i. be spilled, சிந்திப் போ; 2. be destroyed; 3. trickle, சொட்டியொழுகு.
சிந்தாதே மங்காதே யெடுக்க, to take a thing up without spilling or spoiling. சிந்துண்டு போக, to be spilled or shed; to be destroyed. இரத்தம் சிந்த, to shed blood. கண்ணீர் சிந்த, to shed tears. மூக்குச் சிந்த, to blow the nose. வேர்வை சிந்த, to perspire.