கட்டு - Kattu
s. a tie, a bandage, knot
தளை; 2. bundle, faggot, pack, bale,
மூட்டை; 3. fabrication, invention,
கட்டுக்கதை; 4. divination, magic
குறி; 5. an impediment, obstruction, restraint,
தடை; 6. building,
கட்டடம்; 7.
adj. of
கடுமை which see; 8. robust build; strong constitution; 9. decorum,
மரியாதை; 1. guard, sentry, watch, patrol,
காவல்; 11. boil, tumour,
புண்கட்டி; 12. abundance, plenty,
மிகுதி.
எல்லாரும் ஒரு கட்டாயிருக்கிறார்கள், they are all together in one plot, they are all of one mind. கட்டுக்கடக்க, to exceed the limit, to violate the established rules. கட்டுக்கடங்காதது, what is unrestrainable, ungovernable. கட்டுக்கட்ட, to tie a bundle, bale etc; to fabricate. கட்டுக்கதை, --ச்சொல், -வார்த்தை, -விசே ஷம், a fable, fiction, fabricated story. கட்டுக்கழுத்தி, a married woman who wears the தாலி, சுமங்கலி, as opposed to தாலி அறுத்தவள், அறுதலி, a widow; அமங்கலி. கட்டுக்காவல் (கட்டுங்காவலும்) பண்ண, - ஆயிருக்க, to be in close confinement (as marriageable girls). கட்டுக்கிடைச்சரக்கு, goods lying long unsold, old damaged goods. கட்டுக்கிடைத் தண்ணீர், standing water. கட்டுக்குத்தகை, a contract for many years; fixed rent. கட்டுக்கேட்க, to consult a magician. கட்டுக்கோப்பு, a building complete on all sides; an exaggeration; that which is guarded. கட்டுச்சூலை, node, knotty concretion on a joint, சூலைக்கட்டு. கட்டுச்சொல், falsehood, untruth. கட்டுச்சோறு, கட்டுச்சாதம், boiled rice tied up for journey, கட்டமுது. கட்டுத்தறி, a stake or post to which a beast is tied. கட்டுத்தாலி கட்டிக்கொள்ள, to remarry, (said of a widow). கட்டுப்பட, to submit, to be bound by a spell, to be obstructed. கட்டுப்படுத்த, to restrain, restrict. கட்டுப் பண்ண, to stop, prevent கட்டுப்பல்லக்கு, a dooly, palanquin கட்டுப்பாடு, a mutual agreement, league conspiracy, compact, bond, social or religious union forbiding the use of anything; fabrication. கட்டுப்பாடுபண்ண, to restrain, to keep under restraint or in order. கட்டுப்பெட்டி, a journey box containing cooking utensils and materials; 2. a person of old-fashioned ways (Loc.) கட்டுமட்டு, economy, fruguality, thrift. கட்டுமரம், a raft, float. கட்டுமாமரம், grafted mango tree. கட்டுரை, a solemn declaration; an undoubted truth; a proverb; a lie. கட்டுவடம், a necklace. கட்டுவிட, to be loosened, to be broken. கட்டோடே, adv. wholly, entirely. கட்டோடே அழிய, to be utterly ruined. கட்டோடேதள்ள, to cast off or reject entirely. உள்கட்டு, the inner apartment for females. சரீரக்கட்டு, தேகக்கட்டு, firm constitution. சனக்கட்டாயிருக்க, to have a large family circle. சாதிக்கட்டு, social bond or union, the customs & rules of caste. நடுக்கட்டு, girdle; 2. the middle of a house. நீர்க்கட்டு, stoppage of urine, strangury. பந்துக்கட்டு, plot, conspiracy, கட்டுப் பாடு; 2. relation by marriage உறமுறை. பின்கட்டு, the back part of the house; 2. taking the arms behind the back. மலக்கட்டு, constipation. முன் கட்டு, the front part of the house. முன் கட்டு பின்கட்டாய், with arms tackled in front and behind the back.
கிளை - Kilai
s. a branch, மரக்கொம்பு; 2. twig, bough, sprig, தளிர்; 3. relations, kindred, சுற்றம்; 4. group, company, கூட்டம்; 5. section, division, பகுப்பு; 6. bamboo, மூங்கில்; 7. a kind of flute.
கிளைக்கதை, an episode. கிளைஞர், relations. கிளைக்கேள்வி, supplementary question. கிளைநறுக்க, to prune, to lop. கிளைமை, relationship, friendship. கிளையார், கிளைஞர்relations, friends. கிளைவழி, உறமுறை வழி, lineage; a branching street. கிளைவிட, -ஓட, to put forth twigs, to ramify. நெடுங்கிளை, a straight branch. பக்கக்கிளை, a by-shoot.
நளினம் - Nalinam
s. the lotus, தாமரை; 2. wit, pleasantry, jesting, இங்கிதம்; 3. irony, satire, நிந்தை; 4. mocking, scoffing, ridicule, பரிகாசம்.
நளினக்கதை, jesting, fun; 2. coaxing talk. நளினக்காரன், a wag, a jester, a mocker. நளினச்சொல், --வார்த்தை, wit, joking, ridicule. நளினதளம், a petal of the lotus. நளினதளாயதாட்சம், eye resembling a lotus petal. நளினி, Lakshmi, இலக்குமி (as residing in a red lotus); 2. a tank in which the lotus grows, தாமரைத்தடாகம்; 3. a melody, ஓர்பண். நளினை, Lakshmi.
From Digital DictionariesMore