பற்று - Parru
s. a grasp, seizure, பிடிக்கை; 2. receipt, ஏற்கை; 3. adherence, attachment, சார்பு; 4. anything adhering or sticking, ஒட்டு; 5. medical application, plaster, சேர்வை; 6. alloy, கலப்பு.
பற்றலர், பற்றார், foes, enemies. பற்றிலி, one free from sensual attachments as the deity or an advanced devotee. பற்றுக்கால், the supporter of a lever or swing. பற்றுக் குறடு, a pair of tongs. பற்றுக்கொண்டாட, -கூற, to be greatly attached to objects of sense. பற்றுக்கொள்ள, to be attached to earthly things. பற்றுக்கோடு, a walking staff, பற்றுக் கோல்; 2. (fig.) support, dependance, defence, தஞ்சம். பற்றுச் சீட்டு, a receipt. பற்றுப் பூச, -போட, to use outward applications to the body. பற்றுவரவு, debit and credit. பற்றுவாய், the pan or touch hole of a gun. பற்றுவீடு, relinquishment of earthly attachments. மனப்பற்று, attachment, love.
இரத்தம் - Ratham
ரத்தம்,
s. blood,
உதிரம்; 2. red, crimon,
சிவப்பு; 3. coral,
பவளம்; 4. lungs, lever, spleen and other viscera,
ஈரல்; 5. saffron,
குங்குமம்; 6. stick lac,
கொம்பரக்கு.
இரத்தக்கலப்பு, --உறவு, relation by blood, consanguinity. இரத்தக்கவிச்சு, --க்கவில், offensive smell of blood. இரத்தக்கழிச்சல், --கிராணி, dysentery. இரத்தக்குழந்தை, a new-born child. இரத்தக் கொழுப்பு, --புஷ்டி. lustiness, stoutness, plethora, pride. இரத்தங்கக்க, இரத்தமாய் வாயிலெடுக்க, to vomit blood. இரத்தங்குத்தி வாங்க, to blood. இரத்த சம்பந்தம், consanguinity. இரத்த சாட்சி, martyrdom, martyr (chr. us.) இரத்தச் சுருட்டை, blood carpersnake, the bite of which causes blood vomiting. இரத்தம் சுண்டிப்போயிற்று, the blood is dried up by hunger, fasting etc. இரத்த நரம்பு, --தாது, vein, blood vessel. இரத்த பாத்தியம், consanguinity, kin. இரத்தபாசம், affection due to blood relationship. இரத்தப்பழி, revenge for bloodshed. இரத்தப்பிரமியம், bloody urine. இரத்தப்பிரவாகம், a flood of blood. இரத்தப்பிரியன், a blood thirsty man. இரத்த மூலம், hemorrhoids. இரத்தம் பீறிடுகிறது, blood gushes out. இரத்தம் வடிகிறது, பாய்கிறது, blood runs down. இரத்தாசயம், the heart. இரத்தாம்பரம், red or purple cloth. இரத்தோற்பலம், the red water-lily.
சாதி - Saathi
s. ஜாதி, s. sex, tribe, caste, குலம்; 2. kind, class, இனம்; 3. race, family, குடும்பம்; 4. high caste, best sort or kind, மேற்சாதி; 5. nut-meg tree, சாதி மரம்; 6. a group, a multitude; 7. (logic.) a futile answer.
சாதிகுலம், high caste; 2. caste, tribe. சாதிகெட்டவன், one who has lost his caste; 2. one of low caste. சாதிக்கட்டு, caste rules. சாதிக்கலப்பு, mixed caste. சாதிக்கலாபம், caste disturbance. சாதிக்காய், nut-meg. சாதிக்குதிரை, a horse of fine breed. சாதிக்குப் புறம்பாக்க, to turn out of caste. சாதிக்கோழி, poultry of the better breed. சாதிசண்டாளன், one born of a Brahmin mother and a Sudra father; 2. one of a low caste. சாதிச் சரக்கு, a superior kind of merchandise. சாதித்தலைவன், the chief or headman of a caste. சாதிபேதம், -வித்தியாசம், -வேற்றுமை, caste distinctions, different castes, kinds of sorts. சாதிப்பத்திரி, சாதிப்பூ, mace. சாதிப்பிரஷ்டன், an out-caste. சாதிமணி, a genuine gem. சாதிமல்லிகை, Italian jasmine of an excellent kind. சாதிமானம், sympathy or fellow-feeling in a tribe. சாதிமான், one of a superior caste. சாதிமுறை, -முறைமை, the laws, rules and usages of a caste. சாதியாசாரம், the manners and customs of a caste. சாதியார், சாதிசனம், people of the same caste. சாதியைவிட, to lose or break caste. சாதிவிருத்தி, the hereditary profession of a caste. சாதிவெள்ளைக்காரன், a pure European. அந்நியசாதி, அன்னியசாதி, foreigners, low-castes. ஆண்சாதி, பெண்சாதி, both the sexes. ஈனசாதி, degraded caste. தீண்டாச்சாதி, degraded low caste not to be touched. பலபட்டடைச்சாதி, mixed caste. புறச்சாதியார், the gentile nations, out-caste people. மிருகசாதி, the brute creation; 2. stupid people. மேற்சாதி, high caste. விச்சாதி, mixed caste.
From Digital DictionariesMore