காற்று - Kaatru
s. a breeze, wind, வாயு; 2. ghost, evil spirit, ஆவேசம்; 3. breath, சுவாசம்.
காற்றடிக்கிறது, the wind blows. காற்றாடவைக்க, to air a thing, to expose a thing to the wind. காற்றாடி, a paper kite; 2. a changeable person. காற்று அடங்கிற்று, --அமர்ந்தது, -- தணிந்தது, the wind has subsided or fallen. காற்றுக்கழிந்தது, --பறிந்தது, the wind broke or passed downwards. காற்றுக் கிளம்பவில்லை, no wind arises, it is calm. காற்றுக்கு மறைவிடம், a shelter from the wind. காற்றுச்சேஷ்டை, --ச்சங்கை, --ச்சங் கதி, mischief of a demon. காற்றுத் திரும்புகிறது, the wind shifts. காற்றுவாக்கில், --வாட்டத்தில், in the direction of the wind. காற்றுசகாயன், காற்றின் சகாயன், fire. காற்றோட்டம், ventilation. இளங்காற்று, a gentle breeze. ஊதல்காற்று, பனிக்--, a cold wind. சுவாத்தியமான காற்று, a pleasant or wholesome wind. தென்றல், தென்காற்று, the south wind. நச்சுக்காற்று, noxious air. பெருங்காற்று, உரத்தகாற்று, a strong violent wind. மேற்காற்று, the west wind. வடந்தை, or வாடை, வடகாற்று, the north wind.
ஓட்டம் - Oottam
v. n. running, flight, speed, course, a run; 2. current, நீரோட்டம்; 3. defeat, rout, தோல்வி; 4. income, means, வருவாய்; 5. brilliance as in a gem.
அவன் அங்கே யெடுத்த ஓட்டம் இங்கே வந்தோய்ந்தது, he run all the way hither. ஒரே ஓட்டமாய்வா, come at once without halting on the way. ஓட்டத்தில் விட, to gallop, to put off. ஓட்டம் காட்ட, to run on inducing others to follow. ஓட்டமாய் ஓட, to run with great speed. ஓட்டம்பிடிக்க, to run off with speed, to flee; 2. to overtake in running. நீரோட்டம், a current. காற்றோட்டம், ventilation.