குறி - Kuri
VI. v. t. appoint, determine, design, நியமி; 2. place a mark, note down, குறித்துக்கொள்; 3. intend, purpose கருது; 4. denote, refer to, சுட்டிக் காட்டு; 5. foretell, presage, முன்ன றிவி; 6. blow as a conch, sound, ஊது.
இதிலே அவன் குறிக்கிறதென்ன? what does he mean by this? குறித்த காலத்திலே, at the appointed time. குறித்த தொகை, the sum specified. குறித்து, concerning, about. அதைக்குறித்துச் சொன்னான், he spoke about it, or concerning it, he described it. அவனைக்குறித்து, concerning him. குறித்துவைக்க, -க்கொள்ள, to mark, to set a mark by, to note a thing in a book. குறிப்பிக்க, (caus.) to signify; to intimate; 2. to get noted down. முன்குறித்தல், முன்குறிப்பு, (christ. us.) predestination.
விலை - Vilai
s. price, value, கிரயம்; 2. selling, sale, விற்கை.
கேட்கிற விலை, the price asked or offered. விலை குறிக்க, -இட, -கட்ட, to set a price. விலை கேட்க, to ask or offer a price. விலைக்கிரயம், the price. விலைக்கிராக்கி, dear price. விலைக்குக் கொடுக்க, to sell. விலைஞர், those of the chetty caste, merchants. விலை தீர்க்க, to settle the price. விலை பேச, to bargain for a commodity. விலைபொருந்த, -மேவ, -இணங்க, to agree about the price. விலைமகள், a prostitute. விலை மதிக்க, to estimate the price of an article. விலைமலிவு, cheapness. விலையாக, -போக, -ப்பட்டுப்போக, to go off by sale, to be sold. விலையுணி, one sold for debt; 2. one whose property is all sold for debt; 3. a slave re-sold. விலையேறப் பெற்றது, that which is precious.
மட்டு -
s. measure, quantity,
அளவு; 2. limit, extent, boundary,
எல்லை; 3. moderateness,
மிதம்; 4. toddy, vinous liquor,
கள்.
அம்மட்டு, இம்மட்டு, so far, so much, that much. அம்மட்டில், அம்மட்டும், so far, அந்த மட்டும். எம்மட்டு, எம்மட்டும், how much? how far? எந்தமட்டும். மட்டாய், மட்டோடே, மட்டுக்கு மட் டாய், temperately, sparingly. மட்டாய்ச் செலவழிக்க, to be frugal. மட்டிட, மட்டுக்குறிக்க, to fix a limit. மட்டில்லாத, immense, infinite. மட்டில்லாமல், மட்டுத்தப்பி, immoderately. மட்டுக்கட்ட, -ப்படுத்த, -ப்பண்ண, to stint, to limit, to moderate; 2. to hinder, check; 3. to make an estimate. மட்டுக்கும், adv. so far, so much. மட்டுக்கோல், a measuring rod. மட்டுத்தப்ப, to exceed the propriety, to live extravaqantly. மட்டுப்பட, மட்டாய்ப்போக, to decreas, to be measured or limited. மட்டுப்படாதவன், a stiff-necked person. மழைமட்டுப்படுகிறது, the rain abates. மட்டுமரியாதை, -மதிப்பு, due regard, politeness; good, moral behaviour. மட்டு (மட்டுக்கு) மிஞ்சிப்பேச, to speak too much. மட்டும், until so far. அந்த ஊர்மட்டும், as far as that town. அம்மட்டும், இம்-, இம்மட்டுக்கும், only so much, just so far, hitherto. இந்நாள் மட்டும், till this day. இம்மட்டுந்தான், that is all, nothing more. நான் வருமட்டும், till I come. மட்டோடேயிருக்க, to be moderate.
From Digital Dictionaries