விலங்கு - Vilangu
s. fetters, தளை; 2. an animal, a beast, மிருகம்; 3. that which is transverse of cross, குறுக்கு.
விலங்கரசன், a lion, the king of beasts. விலங்கு சாதி, விலங்கினம், beasts. விலங்குபோட, -தைக்க, -மாட்ட, to fetter, to chain.
துடுக்கு - Thudukku
s. insolenee, obstinacy, impertinence, குறும்பு; 2. quickness, activity, விரைவு.
துடுக்கன், துடுக்குக்காரன், an obstinate rude fellow. துடுக்குப்பண்ண, to be insolent, to act rudely.
வழக்கு - Vazhakku
s. common usage, manners, வழக்கம்; 2. a quarrel, a law-suit a litigation, a strife or contention; 3. style, usage, phraseology, வழக்க நடை.
வழக்கறுக்க, வழக்குறுத்த, to decide a case. வழக்காட, to be at law with one another. வழக்காயிருக்க, to be under dispute. வழக்காளி, வழக்கன், the parties in a law-suit, the complainant, plaintiff. வழக்குக்குப் போக, to go to law. வழக்குக் கேட்க, to hear or try a case. வழக்குச் சொல்ல, to make a complaint, to state a case in court. வழக்குத் தீர்க்க, to settle a dispute or law-suit. வழக்குத் தொடுக்க, to commence a law-suit. வழக்கோரம், partiality in deciding a case. அறா வழக்கு, an endless dispute. எதிர் வழக்கன், the defendant. ஒருதலை வழக்கு, an ex-parte statement. கணக்கு வழக்கு, dealings, accounts, affairs not yet settled.
From Digital DictionariesMore