உடல் - Udal
உடர், s. body, சரீரம்; 2. a consonant, மெய்யெழுத்து; 3. ill-will, enmity.
உடலிரண்டு உயிரொன்று, two bodies but one life; 2. a shell fish; 3. intimate friendship. உடலிலான், Kama, மன்மதன். உடலெடுக்க, to take a body; to become fat or fleshy. உடலெழுத்துக்கள், the consonants. உடல் தழும்பு, a scar; a cicatrice. உடற்குறை, a headless body; any blemish in the body. உடற்கூறு, the structure or constitution of the human body; anatomy. உடற்கூற்றுத் தத்துவம், the principles of anatomy.
தத்துவம் - Thathuvam
s. the essential nature of things, qualities, property, குணம்; 2. power, authority, அதிகாரம்; 3. truth, reality, உண்மை; 4. bodily vigour, strength, சத்துவம்; 5. sexual energy or appetite differing according to age, constitution etc; 6. physiology, natural philosophy, works treating on physics, தத்துவ நூல்.
தத்துவ ஆகமம், -நூல், a book of metaphysics. தத்துவக் கடுதாசி, a power of attorney, a warrant, a letter of administration. தத்துவ சாஸ்திரம், the philosophy of nature-as a science, physics, physiology, ontology, metaphysics. தத்துவ ஞானி, a philosopher, a professor of natural philosophy, a truly wise man acquainted with the 96 தத்துவம். தத்துவத்திரயம், a metaphysical triad, God, spirit and matter; 2. the three classes of faculties or powers, ஆத்தும தத்துவம், சிவதத்து வம், and வித்தியா தத்துவம். தத்துவன், Siva, as lord of all powers; 2. Argha of the Jainas. தத்துவாதி, தத்துவாதிகள், a class of the Brahman caste. தத்துவாதீதன், God as not depending on powers and faculties. ஆள் தத்துவம், personality. உடற்கூற்றுத் தத்துவம், the nature and constitution of the body anatomically considered. தெய்வ தத்துவம், the Godhead. வாலதத்துவம், juvenility. வீரதத்துவம், heroism.
கூற்றம் -
கூற்றன், கூற்று, கூற்றுவன், s. (கூறு) Yama, the God of death, (as he separates the life from the body); 2. a foe, சத்துரு; 3. that which ruins or destroys; 4. word, வார்த்தை.
கூற்றுதைத்தோன், Siva who once kicked Yama to save Markanda.
From Digital DictionariesMore