கூர்மை - Kuurmai
s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு.
கூரிய, கூர் adj. sharp. கூரியது, that which is sharp. கூரியவாள், a sharp sword. கூரியன், a judicious and skilful man. கூர்ங்கண், sharp, piercing eyes. கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument). கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing. கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently. கூர்ம்பல், a sharp tooth. புத்திக்கூர்மை, intellectual acuteness.
ஆலோசனை - Aaloosanai
s. deliberation, consultation, யோசனை; 2. counsel, advice, புத்தி.
ஆலோசனை கேட்க, to ask advice, to take advice. ஆலோசனை சங்கம், the privy council of a king; council. ஆலோசனை பண்ண, to consult. தீர்க்காலோசனை, deep deliberation. புனராலோசனை, reconsideration.
ஒட்டு - Ottu
s. & v. n. patch; 2. union, friendship; 3. smallness, narrowness; 4. emulation, rivalry, இகலாட்டம்; 5. bark of a tree; 6. graft; 7. favourable opportunity, நற்சமயம்; 8. raising the bid, as in auction, விலைகூட்டுதல்; 9. border, edge, ஓரம்; 1. attachment, affection, love அபிமானம், பிரியம்; 11. division, vow, சபதம்.
ஒட்டுக்காய்ச்சல், a low lingering fever, contagious fever. ஒட்டுக்குஞ்சு, a small white louse; a very young bird. ஒட்டுக்குடி, a family or person dwelling with another is the same house. ஒட்டுக்கேட்க, (ஒற்றுக்கேட்க) to eavesdrop, to overhear. ஒட்டுத் திண்ணை, a narrow pyal. ஒட்டுத்தையல், mending, patching. ஒட்டு நிற்க, to lurk, to overhear. ஒட்டுப்பற்று, ஒட்டுரிமை, distant relationship. ஒட்டுப்பற்றில்லாமல் போயிற்று, all friendship or relationship has ceased. ஒட்டுப்பார்க்க, to observe slyly; to peep, to overhear. ஒட்டுப்புல், a grass full of little clots. ஒட்டுப்போட, to patch up, to stick on. ஒட்டுமா, grafted mango. ஒட்டுவிட்டுப் போக, to become disjoined or disjointed. ஓரொட்டு, adv. altogether, by the lump, on an average. ஓரொட்டுக்கு வாங்க, to buy commodities by wholesale.
From Digital DictionariesMore