மண் - Mann
s. the earth, the world, பூமி; 2. soil, ground, land, நிலம்; 3. dust, earth, தூள்; 4. excellence, greatness, மாட்சிமை; 5. drum-paste (to increase its sound), முழவின் மார்ச் சனை; 6. adorning, decorating, ஒப் பனை; 7. a hill, a mountain, மலை; 8. lime-mortar, சுட்ட சாந்து.
மட்கலம், மண்கலம், மண் பாத்திரம், an earthen vessel. மட்குகை, மண்குகை, a cave in the earth, a crucible. மட்கொத்தளம், a bulwark of earth, a rampart. மட்சுவர், மண்சுவர், a mud-wall. மண் கட்ட, to form earth, as white ants; 2. to make moulds of earth for casting metals. மண்கணை, an earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு; 2. any drum. மண்டலம், மண்ணிலம், மண்ணுலகு, the earth. மண்டலத்திலே வழங்காத வழக்கம், a thing quite unusual. மண்டாங்கி, மண் தாங்கி, a board which supports, a mud wall over a door or window. மண்ணாங்கட்டி, a clod, a thing of no importance. மண்ணாசை, desire of earthly things. மண்ணிட, மண்பூச, to plaster with clay. மண்ணீரல், the spleen, the milt. மண்ணுடையான், மண்ணரிவரன், a potter. மண்ணுணி, a venomous snake, said to feed on earth; 2. a mean worthless person. மண்ணுளிப் பாம்பு, a harmless kind of snake. மண்ணுறுத்த, to adorn, to embellish (மண் 6). மண்மகள், the goddess earth. மண்மகள் புதல்வர், the agriculturists. மண்மழை, -மாரி, a shower of sand. மண்வாரி, a great wind drifting the dust. மண்வெட்டி, a hoe, a mattock.
கொத்தளம் -
s. a bulwark, bastion, rampart, அரண்.
மண் கொத்தளம், a mud-bastion.
அலங்கம் -
s. fortress-wall, rampart, கொத்தளம்.
From Digital Dictionaries