களம் - Kalam
s. place, open field, இடம்; 2. a threshing floor, நெற்களம்; 3. battle-field, போர்க்களம்; 4. barren or brackish soil, களர்நிலம்; 5. shallow shelf of rocks under water, sand bank; 6. court, theatre, சபை; 7. mind, மனம்.
கப்பல் களத்தில் ஏறி (பொறுத்து) ப் போயிற்று, the vessel struck upon a shoal. களங்கொள்ளுதல், gaining a victory; 2. securing an abiding place. களப்பலி, human sacrifice offered to Durga previous to battle. களப்பிச்சை, alms given to the mendicants at the threshing floor. களமதி, estimation of the quantity of grain on the threshing floor. களமர், people that till the field, husbandmen. களம் அளக்க, to measure paddy etc. on the threshing floor. களவடி, -வாசம், -வாரம், wages of grain to the labourers from the threshing floor. அமர்க்களம், போர்க்களம், யுத்தகளம், படுகளம், the field of battle. கொலைக்களம், the place of execution.
கொலை - Kolai
s. killing,
கொல்லல்; 2. murder.
வதை; 3. vexation, teasing.
கொலை செய்ய, கொலை புரிய, கொலை பண்ண, to commit murder.
கொலைகாரன், கொலையாளன், கொலைஞன், a murderer; an executioner. கொலைக்களம், the place of public execution. கொலைஞர், assasins, executioners. கொலைபாதகம், --ப்பழி, the crime of murder. கொலையுண்ண, to be killed. கொலைவன், a murderer; 2. a hunter; 3. Siva as the destroyer. தற்கொலை, (தன்+கொலை) suicide.