ஒதுக்கு - Othukku
III. v. i. (caus. ofஒதுங்கு) drive cut of the way, push into a corner; ஒதுங்கச்செய்; 2. adjust, put in order, சீர்ப்படுத்து; 3. take under shelter, சேர் VI. 4. kill, கொல்லு; 5. impoverish, வறுமைக்குள்ளாக்கு.
ஒதுக்குப் பொதுக்குப் பண்ண, to embezzle, பண மோசம் செய்ய. என் பயிருக்கும் தண்ணீரொதுக்கு, lead the water to my field also. கோழி குஞ்சுகளைச் செட்டைக்குள் ஒதுக் கும், the hen protects is thickens under its wings. கரை ஒதுக்க, to cast on shore; to drive on shore. புடவை ஒதுக்க, to tuck or gather up the clothes. மயிரை ஒதுக்க, to adjust the hair with the hand or comb. ஒருவனை ஒதுக்கிவைக்க, to segregate, excommunicate one. ஒதுக்கி வைக்க, to reserve (a compartment. )
கொல் - Kol
a particle (இடைச்சொல்) expressing doubt or used as an expletive; 2. an imitative sound, a great noise; 3. s. a blacksmith or his caste, கொல் லன்; 4. a trowel, கொல்லறு; 5. a large nail for studding doors or gates to add to their strength, கொல்லுத்தடி யாணி; 6. (in compounds) metal (as in செங்கோல், gold).
கொல்லச் சேவகர், treasure-keepers. கொல்லறு, a trowel, கரணை. கொல்லற்றுக்காரன், கொற்றன், கொல் லத்துக்காரன், a bricklayer, a mason. கொல்லற்று வேலை, masonry. கொல்லனுலை, கொல்லுலை, a forge, a smithy. கொல்லன், a blacksmith, கருமான். கருங்கொல்லர், ironsmiths. செங்கொல்லர், goldsmiths.
நில் - Nil
நில்லு V. v. i. (நின்றேன், நிற்பேன்) stand; 2. stay தங்கு; 3. be durable, last, persist in a course of conduct, persevere, நிலைநில்; 4. be retained or held, அடங்கு; 5. cease, be discontinued, stopped, suspended, ஒழி.
நின்றதுநிற்கப் புறப்பட்டார், he set out abruptly. தெய்வம் நின்றுகொல்லும், God is slow in punishing men. அதுநிற்க, let it alone, leaving that aside, (an expression used in reverting to another point). நில்லா, நில்லாத, not durable. நில்லாமல், (நிற்காமல்) போக, to go without delay; to come to an end. நில்லாமை; inconstancy, mutableness. நிற்றல், v. n. a standing, நிலை; standing. நின்று, adv. part. standing; 2. after the local ablative இல் it expresses from, இருந்து, (as in ஆற்றில் நின்றேற, to come up from or out of the river). நின்றுநின்று நடக்க, to make frequent stops in walking. நின்றுபோக, to cease, to stop, (as pain, salary etc.).
From Digital DictionariesMore